திருச்சியில் நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் சென்ற சென்ற ஒரு தம்பதியினரை எட்டி உதைத்த காவல்துறை ஆய்வாளரின் பொறுப்பற்ற செயலால், அந்த வாகனத்தில் சென்று கொண்டிருந்த உஷா என்ற கர்ப்பிணி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்

இன்று உலகமே மகளிர் தினத்தை கொண்டாடி வரும் நிலையில் சிசுவுடன் உள்ள ஒரு பெண்ணின் மரணத்திற்கு காரணமான ஆய்வாளர் காமராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து கட்சி தலைவர்களும் தமிழக அரசை வலியுறுத்தினர்

இதனையடுத்து ஆய்வாளர் காமராஜ் மீது கொலை செய்யும் நோக்கோடு விபத்து ஏற்படுத்துதல் உள்பட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிபதியின் முன் ஆஜர்படுத்தப்பட்டார். காவல் ஆய்வாளர் காமராஜை வரும் 21 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending