கமல் கட்சியில் சேர தமிழிசை பதிவு செய்திருப்பாரோ?

Published:

tamilisai 1 - 2026

கமலஹாசன் கட்சியில் சேர்வதற்கு, தமிழிசை தானே பதிவு செய்திருப்பார் என்று கூறியுள்ளது மக்கள் நீதி மய்யம். தங்களது மக்கள் நீதி மய்யத்தில் சேர யாருக்கும் அழைப்பு அனுப்பப்படவில்லை என்றும், இணையத்தில் பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே மெயில் வரும் என்றும் மக்கள் நீதி மய்யம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

கமல், அண்மையில் மக்கள் நீதி மய்யம் என, கட்சி அமைப்பைத் தொடங்கி, தனது கட்சியில் உறுப்பினராகச் சேர இணையதளம் மூலமாகவும் நேரடியாகவும் சேரலாம் என்றார். அதன்படி, உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இன்று திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மக்கள் நீதி மய்யத்தில் நான் இணைந்துவிட்டதாக எனக்கு இ-மெயில் அனுப்பியிருக்கிறார்கள். அந்த இமெயிலில் நான் நாம் ஆனோம். இன்றிலிருந்து எங்கள் கட்சியில் நீங்கள் உறுப்பினர் ஆனீர்கள். உங்களது உறுப்பினர் எண் இதுதான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்று கூறிச் சிரித்தார்.

மேலும், என் மெயில் ஐடி இவர்களுக்கு எப்படிக் கிடைத்தது. உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்பதற்காக, கிடைக்கும் இ-மெயில் முகவரிக்கெல்லாம் கமல் அழைப்பு அனுப்புகிறார். இப்படிப்பட்ட அப்பட்டமான பொய்யான கட்சி நடத்தி வருகிறார். கையில் கிடைக்கும் இமெயில் ஐடிக்கு எல்லாம் மெயில் அனுப்புகிறார் என்று கிண்டடித்தபடி, தனக்கு வந்த மெயிலையும் காட்டினார்.

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

தமிழிசையின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள மக்கள் நீதி மய்யம், கட்சியில் சேர யாருக்கும் அழைப்பு அனுப்பவில்லை; இணையதள பக்கத்தில் பதிவிட்டால் மட்டுமே அவர்களுக்கு மெயில் அனுப்பப்படும் என்று கூறியுள்ளது.

மிஸ்ட் கால் மூலம் கட்சியில் உறுப்பினர்களைச் சேர்த்தது நினைவுக்கு வ்ந்து, ஒருவேளை மக்கள் நீதி மய்யத்துக்கு மிஸ்ட் மெயில் மூலம் சேர்த்திருப்பார்கள் என்ற பிரமையோ தமிழிசைக்கு என்கிறார்கள் வலைத்தள வாசிகள்.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img