tambaram vhp event - 2026

ஓம் சரவண பவ வேள்வி; விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் களைகட்டிய நிகழ்ச்சி!

ஆன்மிகச் செய்திகள் சற்றுமுன் சென்னை லைஃப் ஸ்டைல்
tambaram vhp event - 2026

விசுவ ஹிந்து பரிஷத் – தாம்பரம் மாவட்டம் ‘ஓம் சரவணபவ’ வேள்வி நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

10008 முறை ஓம் சரவணபவா எழுதக் கூடிய முருகன் நாம வேள்விக்காக, தமிழகம் முழுவதும் மட்டுமன்றி, உலகின் சில நாடுகளில் இருந்தும் குறிப்பாக, இலங்கை போன்ற நாடுகளில் வசிக்கும் முருக பக்தர்கள் சிறியவர் முதல் பெரியவர் வரை 700 பக்தர்கள் எழுதி சமர்ப்பித்திருந்தார்கள்.

இதன் தொடர்ச்சியாக 25.12.2025 வியாழன் வளர்பிறை சஷ்டி அன்று, காலை இரும்புலியூர் வேம்புலி அம்மன் கோயிலில் சத்ரு சம்ஹாரம் ஹோமம் மற்றும் பக்தர்களுக்கு வழங்கக்கூடிய வேல்கள் ஹோமத்தில் வைத்து பூஜிக்கப்பட்டது. தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

அன்று மாலை கிழக்குத் தாம்பரம் ஸ்ரீ சங்கர வித்யாலயா பள்ளியில் 4 முதல் இரவு 7 மணி வரை கந்தசஷ்டி கவசம் கூட்டுபராயணம், உலக நன்மைக்காக கூட்டு சங்கல்பம், ஆன்மீக பெரியோர்கள் உரை எனும் ஏற்பாட்டின் படி நிகழ்ச்சி நடைபெற்றது.

ஓம் சரவணபவா 10008முறை எழுதிய பக்தர்களுக்கு பூஜிக்கப்பட்ட சிறிய வேலும், திருச்செந்தூர் பிரசாதமும் வழங்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகள், முருகன் விக்கிரஹத்திற்கு பூஜைகள் நடைபெற்றது. 500 பக்தர்கள் ஒன்று சேர கந்தசஷ்டி பாராயணம் மிக சிறப்பாக பக்தியுடன் பாடினர்.

இந்த நிகழ்ச்சியில் திரளான ஆன்மிகப் பெரியோர்கள், சமுதாயப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். விசுவ ஹிந்து பரிஷத் வட தமிழக மாநில செயலாளர் பால மணிமாறன், மாநில அமைப்புச் செயலாளர் சு வெ ராமன் ஆகியோரும் கலந்து கொண்டு, விழா சிறப்புரை வழங்கினார்கள்.

தாகூர் மருத்துவக் கல்லூரி சார்பாக இலவச மருத்துவப் பரிசோதனை முகாம் அமைக்கப்பட்டது. இதில், சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் உடல் பரிசோதனை செய்துகொண்டு பயன்பெற்றனர். ஆண்டாள் பக்தர் பேரவை சார்பாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.