செல்போன் கோபுரத்தில் ஏறிய சுமைதூக்கும் தொழிலாளி: சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே பரபரப்பு

சற்றுமுன் தமிழகம்

cellphone - 2026

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக இருந்து வரும் ஒருவர் நேற்று நள்ளிரவில் திடீரென சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள செல்போன் டவரில் ஏறி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு பின்னர் அவரை செல்போன் டவரில் இருந்து இறக்கினர். பின்னர் நடந்த விசாரணையில் ரயில்வே அதிகாரி அவரை தகாத வார்த்தைகளில் பேசியதால் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை முடிவை எடுத்து செல்போன் டவரில் ஏறியதாக தெரிய வந்தது.

இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை செய்து கொண்டு வருகின்றனர். நள்ளிரவில் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.