அரசுக்கு எதிராக செயல்படாதீர்கள் : அமைச்சர் எச்சரிக்கை

சற்றுமுன்

 அரசுக்கு எதிராக செயல்படாதீர்கள் என தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு மத்திய இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்தில் ‘கீரின் பீஸ் இந்தியா’ என்ற தன்னார்வ தொண்டு நிறுனத்துக்கு தடை விதித்து, அதன் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது அரசு. ‘கீரின் பீஸ் இந்தியா’ அமைப்பு அரசுக்கு எதிராக நீதிமன்றத்தில் போராடி வருகிறது. இதேபோல் போர்ட் பவுண்டேஷேன் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளது மத்திய அரசு.

இந்நிலையில் ‘‘சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அரசு அல்லது குறிப்பிட்ட கட்சிக்கு எதிராக செயப்படுவதையே நோக்கமாக கொண்டிருக்கின்றன. அதன்மூலம் வெளிநாடுகளிடமிருந்து பணம் பெறமுடியும் என்று நினைத்து செயல்படுகின்றன. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு காரணம், அவர்கள் சட்டவிதிகளை மீறி செயல்பட்டதுதான். எனவே தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அரசுக்கு எதிராக செயல்படக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள கீரின் பீஸ் இந்தியாவின் தற்காலிக தலைவர் கோபால் “அரசு தனக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அனைவரின் குரல்களையும் நசுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படுகிறது” என தெரிவித்துள்ளார்.

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.