தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் அவதூறாகப் பேசியதாகக் கூறி ஆர்ப்பாட்டம் நடத்திய 1,525 பேரை கைது செய்த  காவல்துறை

சற்றுமுன்

புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் அதிமுக நிர்வாகி மற்றும் முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்த கெங்கையம்மாள் சொக்கலிங்கத்தை அமைச்சர் விஜய பாஸ்கர் ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கூறப்படுகிறது.

அமைச்சர் அவதூறாகப் பேசியதாகக் கூறி, தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற முத்தரையர் சங்கத்தைச் சேர்ந்த 1,525 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

கறம்பக்குடி ஒன்றியக் குழுத் தலைவர் பதவிக்கு கடந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தலைமை அறிவித்த வேட்பாளரை எதிர்த்து கங்கையம்மாள் என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதனால் அதிமுக கட்சியில் பொறுப்பிலிருந்த அவரது கணவர் சொக்கலிங்கம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில், தாய்சேய் நலவிடுதி கட்டுவது தொடர்பாக கங்கையம்மாள், சொக்கலிங்கம் இருவரும் தங்கள் பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலருமான விஜயபாஸ்கரை நேரில் சந்தித்தனராம்.

அப்போது வாக்குவாதம் ஏற்பட்டதில் அவர்களை சாதியைக் குறிப்பிட்டு அமைச்சர் விஜயபாஸ்கர் அவதூறாகப் பேசியதாக கூறப்படுகிறது. மேலும், இதுகுறித்து முத்தரையர் சங்க நிர்வாகிகளிடம் சொக்கலிங்கம் தெரிவித்தாராம்.

விஜயபாஸ்கர் திட்டியதைக் கண்டித்து முத்தரையர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக முத்தரையர் சங்கத்தினர் அறிவித்தனர். ஆனால், ஆர்ப்பாட்டத்துக்கு காவல் துறை அனுமதி அளிக்கவில்லை.

நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் நடத்தினர்.இதனால் பல பகுதிகளில் போக்குவரத்து இடையூறுகள், கல்வீச்சு என காவல் துறையினருக்கும் ஆர்ப்பாட்டம் செய்தவர்களுக்கும் இடையில் பெரும் பிரச்னை உருவானது

இந்த நிலையில், முத்தரையர் சங்க நிர்வாகி செல்வகுமார் தலைமையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 1,525 பேரை கைது செய்த காவல்துறையினர்.
நேற்று கைது செய்தனர்.

முத்தரையர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறையினரிடம் அனுமதி கேட்டும் காவல்துறை அனுமதி அளிக்காதது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.