இன்று வெளியாகிறது விஸ்வரூபம்-2 டிரெய்லர்

Published:

10 June10 visvaroopam - 2026கமல்ஹாசனின் விஸ்வரூபம் -2 படத்தின் டிரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசன் இயக்கி, நடித்த `விஸ்வரூபம்’ திரைப்படம், பல்வேறு தடைகளுக்குப் பிறகு கடந்த 2013-ல் வெளியானது. இந்தப் படத்தின் முதல் பாகம் எடுக்கும்போதே, இரண்டாம் பாகத்துக்கான 40 சதவிகித படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாகக் கூறப்பட்டது. இதனால் விஸ்வரூபம் – 2 படம் விரைவில் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், பல்வேறு காரணங்களால் படத்துக்கான வேலைகள் பாதியில் நின்றன. விஸ்வரூபம் -2 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை நடிகர் கமல் சமீபத்தில் தொடங்கி முடித்தார். சென்னை ராணுவப் பயிற்சி மையத்தில் நடந்த இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கமலுடன், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரடக்‌ஷன்ஸ் வேலைகள் நடந்து வந்தன.

Related articles

Recent articles

spot_img