மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்ற உத்தரவை, தமிழக சுகாதார துறைக்கு, மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளதாக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் பேசிய அவர், எய்ம்ஸ் மருத்துவமனை, 200 ஏக்கரில் மதுரையில் தோப்பூர் என்ற இடத்தில் அமைய உள்ளது. 750 படுக்கை வசதிகள் கொண்ட நவீன மருத்துவமனை அமைய உள்ளது. இங்கு 100 எம்பிபிஎஸ் இடங்கள் உருவாக்கப்படும். 60 நர்ஸ் பயிற்சி படிக்கும் வசதி உருவாக்கப்படும் 1,500 கோடி ரூபாய் மதிப்பில் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசுக்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்யும் என்றார்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை: முதல்வர் அறிவிப்பு
Popular Categories