அமமுகவின் பொதுச் செயலாளர் ஆனார் டிடிவி தினகரன்!

சற்றுமுன் சென்னை தமிழகம்

ttvdinakaran electionmanifesto - 2026

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வி.கே.சசிகலா சிறையில் இருந்து வெளியில் வந்த பின்னர் கட்சியின் தலைவராக அவர் தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.

சென்னை கேகே நகரில் உள்ள அமமுக., தலைமை அலுவலகத்தில் டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சி.ஆர்.சரஸ்வதி, கட்சிக் கூட்டத்தில் டிடிவி தினகரன் பொதுச் செயலாளராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று கூறினார்.

சின்னம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் தரப்பு மனு தாக்கல் செய்திருந்த போது, விரைவில் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதாக வாக்குறுதி அளிக்கப் பட்டது. அதை அடுத்து, தேர்தல் ஆணையத்தில் அமமுக.,வை கட்சியாக பதிவு செய்வது என்று இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்டது.

மேலும், 4 தொகுதி இடைத் தேர்தல் வேட்பாளர்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப் படுகிறது.

1 thought on “அமமுகவின் பொதுச் செயலாளர் ஆனார் டிடிவி தினகரன்!”

  1. இதற்குமுன் தினகரன் சொன்னது ஒன்றுமே நடக்கவில்லை என்பதை சசி அறிவாரா ?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.