திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிக்கு இன்று வருஷாபிஷேகம்

Published:

02 June22 temple - 2026திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று ஆனி வருஷாபிஷேகம் நடைபெறுகிறது.

இதுகுறித்து கோயில் இணை ஆணையர் பா.பாரதி வெளியிட்ட செய்திக்குறிப்பில்,  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் வருஷாபிஷேகம் நடைபெறுகிறது. அதன்படி, நிகழாண்டுக்கான வருஷாபிஷேகம் இன்று நடைபெறவுள்ளது.

இதையொட்டி, இன்று அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், பின்னர் கும்பங்கள் வைக்கப்பட்டு யாக பூஜை ஆகியவை நடைபெறுகின்றன.

தொடர்ந்து, காலை 8.30 – 9.00 மணிக்குள் வருஷாபிஷேகம் நடைபெறுகிறது. இரவில் மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாது.

Related articles

Recent articles

spot_img