2020 ஒலிம்பிக் போட்டித் தொடரில் நிச்சயம் களமிறங்க முடியும்: சானியா மிர்சா

சற்றுமுன் விளையாட்டு

04 July28 Sania Mirza - 2026விரைவில் தாயாக உள்ள இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா, 2020ல் நடக்க உள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டித் தொடரில் நிச்சயம் களமிறங்க முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சர்வதேச டென்னிஸ் அரங்கில் இந்தியாவை பெருமைப்படுத்திய வீராங்கனை சானியா மிர்சா. இவர் பெண்கள் இரட்டையர் பிரிவில் ஆஸி., ஓபன் (2016), விம்பிள்டன் (2015), யூ.எஸ்., ஓபன் (2015) சாம்பியன் பட்டமும், கலப்பு இரட்டையர் பிரிவில் ஆஸி., ஓபன் (2009), பிரஞ்சு ஓபன் (2012), யூ.எஸ்., ஓபன் (2014) சாம்பியன் பட்டமும், வென்று அசத்தியுள்ளார்.

இந்தியாவுக்கு பெருமை சேர்ந்த இவர், கடந்த 2010ல் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார். பாகிஸ்தான் வீரரை திருமணம் செய்து கொண்ட போதும், தொடர்ந்து இந்தியாவுக்காக விளையாடி வருகிறார்.

இவர் விரைவில் தாயாகவுள்ளார். இந்நிலையில், வரும் 2020ல் டோக்கியோவில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகள் மூலம் மீண்டும் டென்னிஸ் அரங்கிற்கு திரும்ப திட்டமிட்டுள்ளதாக இந்திய நட்சத்திரடென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.