உலகிலேயே விரைவான பொருளாதார வளர்ச்சி இந்தியாவில்தான்: பிரதமர்!

Published:

01 June16 Modi - 2026

உலகிலேயே விரைவான பொருளாதார வளர்ச்சி அடைந்து வரும் நாடாக இந்தியா திகழ்கிறது என்று பெருமிதம் பொங்கக் கூறினார் பிரதமர் நரேந்திர மோடி!

 

தில்லியில் நேற்று நிதி ஆயோக் அமைப்பின் சிறப்பு ஏற்பாட்டில், உலகளாவிய குளோபல் மொபிலிடி சமிட் 20178 கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார் பிரதமர் நரேந்திர மோடி.

அப்போது அவர், நாடு முழுவதும் நூறு சீர் மிகு நகரங்கள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார். தொழில் நடத்துவதற்குச் சிறந்த இடமாக இந்தியா மாறி வருகிறது என்று குறிப்பிட்ட அவர்,  இதன் மூலம் உலகிலேயே விரைவான பொருளாதார வளர்ச்சியடைந்து வரும் நாடாக இந்தியா விளங்குவதாகத் தெரிவித்தார்.

பொருளாதார வளர்ச்சியில் போக்குவரத்து வசதிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று குறிப்பிட்ட அவர், சிறந்த போக்குவரத்து வசதிகளால் மக்களின் பயணச் சுமை குறைவதாகவும், சரக்குப் போக்குவரத்து எளிமை ஆவதாகவும் கூறினார். போக்குவரத்து வசதிகளைச் செய்வதன் மூலம் ஏராளமான வேலைவாய்ப்புகளும் உருவாக்க முடியும் என்றார் மோடி.

ALSO READ:  தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்!  
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img