தமிழகத்தில் கோயில்களில் பூக்கடை நடத்துவதற்கு அனுமதி இல்லை என இந்து அறநிலையத்துறை அறிவித்துள்ளது. பூக்கடை நடத்த தந்த அனுமதியை இந்து அறநிலையத்துறை ரத்து செய்தது. பூக்கடை ரத்து விவரத்தை உயர் நீதிமன்ற கிளையில் அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
கோவில் வாளாகங்களில், பூ, மாலை உள்ளிட்ட பூஜை பொருள்கள் விற்பனை செய்யலாம் என்ற சுற்றிக்கையை திரும்பப் பெறுவதாக, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணன், கிருஷ்ணவள்ளி முன்பு புதன் கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, கோவில் ஆணையர்களுக்கு, இந்து சமய அறநிலையத் துறை அனுப்பிய சுற்றறிக்கை தாக்கல் செய்யபட்டது.
அந்த சுற்றறிக்கையில், பிப்ரவரி 2ஆம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்தைத் தொடர்ந்து, அதே மாதம் 12ஆம் தேதி முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கோவில் வளாகத்தில் உள்ள கடைகளை காலி செய்ய உத்தரவு பிறப்பிக்கப் பட்டது.
முதலமைச்சரின் முடிவுக்கு எதிராக இருப்பதால், பக்தர்களின் நலன் கருதி பூ, மாலை உள்ளிட்ட பூஜைப் பொருட்களை மட்டும் கோவில் வளாகத்தில் விற்பனை செய்யலாம் என்று அனுமதி வழங்கி ஜூன் 7ஆம் தேதி அனுப்பப் பட்ட சுற்றறிக்கையை திரும்பப் பெறுவதாக கூறப்பட்டுள்ளது.
இதை அடுத்து வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்தி வைக்கப் பட்டது.