சென்னை: திமுக தலைவர் முக ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப் பட்டார்.
திமுக தலைவர் முக ஸ்டாலின் சிறுநீரக தொற்று காரணமாக ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திமுக தலைவராக இருந்த கருணாநிதி மறைவைத் தொடர்ந்து, அவரது மகன் மு.க.ஸ்டாலின் அக்கட்சியின் தலைவர் ஆனார். தொடர்ந்து, கட்சிப் பணிகளில் ஈடுபட்டு, மத்திய பாஜக.,வுக்கு எதிராகவும், பாஜக.,வை விமர்சிப்பவர்களுக்கு ஆதரவு கொடுத்தும், மாநிலத்தில் ஆளும் அதிமுக., அரசுக்கு எதிராகவும் அறிக்கைகள் வெளியிட்டு, கட்சிப் பணி ஆற்றி வருகிறார்.
இந்நிலையில், ஸ்டாலின் உடல் நலக் குறைவால் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். இது குறித்து, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கையில், சிறுநீரகத் தொற்று காரணமாக திமுக தலைவர் ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான சிகிச்சைக்கு பின்னர் அவர் காலையில் வீடு திரும்புவார் என தெரிவித்தனர்.




