கூட்ட நெரிசலை சமாளிக்க தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள்!

chennai central railway station - 2026

சென்னை: பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தென்மாவட்டங்களுக்கு சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுபற்றி தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு அக்டோபர் 26ம் தேதி மற்றும் நவம்பர் 9,16,23,30 ஆகிய தேதிகளில் இரவு 9.15 மணிக்கு சிறப்பு ரயில் (06001) புறப்பட்டு செல்லும். இந்த ரயில் மறுநாள் காலை 10.30 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

அதேபோன்று திருநெல்வேலியில் இருந்து ரயில் (06002) நவம்பர் 18 மற்றும் டிசம்பர் 2ம் தேதிகளில் பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 3.30 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

திருநெல்வேலியில் இருந்து நவம்பர் 3ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06004) மறுநாள் காலை 2.45 மணிக்கு தாம்பரத்திற்கு வந்தடையும்.

சென்னை சென்ட்ரலில் இருந்து நவம்பர் 6,13,20,27 ஆகிய தேதிகளில் இரவு 7 மணிக்கு ரயில்(06007) புறப்பட்டு மறுநாள் காலை 11.05க்கு நாகர்கோவில் சென்றடையும்.

ALSO READ:  சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

நாகர்கோவிலில் இருந்து நவம்பர் 14,21,28 ஆகிய தேதிகளில் ரயில் (06008), புறப்பட்டு மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும்.

அதைப் போன்று சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் (06011) அக்டோபர் 15ம் தேதி மற்றும் நவம்பர் 5,12,19,26 ஆகிய தேதிகளில் இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.50 மணிக்கு செங்கோட்டை சென்றடையும்.

செங்கோட்டையில் இருந்து ரயில் (06012) அக்டோபர் 16 மற்றும் நவம்பர் 13,20,27 ஆகிய தேதிகளில் காலை 5.45 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

மேலும் சென்னை எழும்பூரில் இருந்து ரயில் (06029) நவம்பர் 5ம் தேதி பிற்பகல் 2.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

திருநெல்வேலியில் இருந்து ரயில் (06030) நவம்பர் 4ம் தேதி 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 3 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில்நிலையம் வந்தடையும்.

மேலும் தாம்பரத்தில் இருந்து ரயில் (06063) அக்டோபர் 22ம் தேதி காலை 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 12.30 மணிக்கு நாகர்கோவிலுக்கு சென்றடையும்.

ALSO READ:  மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

அதைப்போன்று சென்னை சென்ட்ரலில் இருந்து ரயில் (06005) அக்டோபர் 12,26 மற்றும் நவம்பர் 9ம் தேதி ஆகிய தேதிகளில் இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.45 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.

அதைப்போன்று ரயில் (06006) அக்டோபர் 14ம் தேதி இரவு 7 மணிக்கு எர்ணாகுளத்தில் புறப்பட்டு மறுநாள் காலை 7.20க்கு சென்ட்ரல் ரயில்நிலையம் வந்தடையும்.

மேலும் ரயில் (06051) சென்னை சென்ட்ரலில் இருந்து அக்டோபர் 13,20,27 மற்றும் நவம்பர் 10,17,24 ஆகிய தேதிகளில் இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு சனிக்கிழமை காலை 5.45 மணிக்கு அகமதாபாத் சென்றடையும்.

இதைப் போன்று சென்னை சென்ட்ரல் இருந்து ரயில் (06058) அக்டோபர் 24,31 மற்றும் நவம்பர் 7,14,21,28 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7 மணிக்கு சந்திரகாச்சி சென்றடையும்.

அதைப் போன்று புதுச்சேரியில் இருந்து ரயில் (06010), அக்டோபர் 27, நவம்பர் 10,17,24 ஆகிய தேதிகளில் மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு திங்கள் கிழமை காலை 4.30 மணிக்கு சந்திரகாச்சிக்கு சென்றடையும்.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

மேலும் சென்னை எழும்பூரில் இருந்து ரயில் (06026), நவம்பர் 7ம் தேதி மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு இரவு 11.15மணிக்கு திருச்சிராப்பள்ளி சென்றடையும்.

அதைப் போன்று ரயில் (06025) நவம்பர் 3ம் தேதி திருச்சிராப்பள்ளியில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு இரவு 8.45 மணிக்கு எழும்பூர் ரயில்நிலையம் வந்தடையும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories