senthil balaji - 2026

அமமுகவில் இருந்து வெளியேறி, திமுக.,வில் தன்னை இணைத்துக் கொண்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசியபோது…

சிறந்த தலைமைப் பண்பு கொண்ட தலைவராக திமுகவின் தலைவர் தளபதியை நான் பார்க்கின்றேன். அவர்மேல் கொண்ட ஈர்ப்பின் காரணமாக இன்று திமுகவில் என்னை இணைத்துக் கொண்டேன்.

இருளை அகற்றி ஒளி தருவது சூரியன். இன்று என்னுடைய மன இருளை அகற்றி ஒளி தந்திருக்கின்ற சூரியனிடம் இணைந்திருக்கிறேன். இபிஎஸ்-ஓபிஎஸ் ஆட்சியை அகற்றி விரைவில் திமுக ஆட்சிக்கு வரும்.

கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும், கரூர் நாடாளுமன்ற தொகுதியிலும் திமுக வெற்றிக்கு பாடுபடுவேன். கரூர் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து திமுகவில் இணைந்தேன்.

பல்வேறு அரசியல் கட்சிகளில் நான் இருந்ததாக கூறப்படுவது தவறான செய்தி. அம்மாவின் மறைவுக்குப் பிறகு தற்போதைய தமிழக அரசு மத்திய அரசோடு இணைந்து தமிழகத்திற்கு துரோகம் செய்து வருகிறது. தமிழகத்தின் உரிமைகளை பறித்து வருகிறது.

ALSO READ:  ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை; போதை, கொலை, குற்றங்கள் குறித்து மக்கள் கவலை!

18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பு வந்தபோது மேல்முறையீடு செல்லாமல், தேர்தலை சந்திக்க வேண்டும் என்று முதன்முதலில் வலியுறுத்தியது நான் தான். 17 பேரையும் திமுகவில் இணைய சொல்லி நான் கேட்கவில்லை.

இபிஎஸ்-ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக மூழ்கும் கப்பல். ஆட்சி கவிழ்ந்தவுடன் இபிஎஸ்-ஓபிஎஸ் அரசியல் காலமும் முடிந்து விடும்.
ஆட்சி முடிந்தவுடன் ஈபிஎஸ் விவசாய பணிக்கு சென்று விடுவார்.

நான் ஏற்கனவே இருந்த இயக்கம், இபிஎஸ்-ஓபிஎஸ் ஆகியோரின் ஆதரவாளர்கள், உள்ளிட்ட முக்கிய பொறுப்பாளர்கள் மிக விரைவில் திமுகவில் இணைவர் என நம்புகிறேன்.

2 responses to “திமுக.,வில் இணைந்தது குறித்து செந்தில் பாலாஜி தரும் விளக்கம்..!”

  1. குங்கும போட்டு வச்சிக்க அனுமதி உண்டா இனி இவருக்கு …?

  2. செந்தில் பாலாஜி .. இனி உங்களுக்கு குங்கும பொட்டு வச்சிக்க அனுமதி உண்டா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending