சேவா பாரதியின் சார்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கல்

 சென்னை:

மழை வெள்ளத்தால் உடைமைகளை இழந்த எளியோரது இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்கவும், தொழில்வளத்தைச் சீரமைக்கவும் அவர்களுக்கான தொழில்முறை உபகரணங்களை சேவாபாரதி தமிழ்நாடு அறக்கட்டளை வழங்கி வருகிறது.

ஜன.10 ஞாயிற்றுக்கிழமை மாலை மணலி பெரிய மாத்தூர் விவேகானந்தா வித்யாலயாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அகில பாரத செயற்குழு உறுப்பினர் சேது மாதவன் ஜி, சென்னை கோட்டத் தலைவர் கல்யாண் ஜி, சேவை ஒருங்கிணைப்பாளர் ராம ராஜசேகர் ஜி, சேவாபாரதி தமிழ்நாடு அறக்கட்டளையின் மாநிலப் பொதுச் செயலாளர் ராஜேஷ் விவேகானந்தன், மாநில அலுவலகச் செயலாளர் திருமதி இந்துமதி ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இஸ்திரிப் பெட்டி, மாவரைக்கும் எந்திரம், தண்ணீர்த் தொட்டி, தள்ளு வண்டி, மூன்று சக்கர வண்டி, மின் உபகரணப் பெட்டி, சவர நாற்காலி, ப்ளாஸ்டிக் மேஜை நாற்காலி உள்ளிட்டப் பல லட்சம் பெறுமானமுள்ள 26 வகையானப் பொருட்கள் 500-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.