ஏ.டி.எம் மையத்தில் கொள்ளை… ரூ. 3.90 லட்சம்! இளம் பெண் கைது!

சற்றுமுன் சென்னை லைஃப் ஸ்டைல்
atm robbery - 2026

புதுச்சேரியில் ஏடிஎம் மையத்தில், சுமார் 4 லட்சம் ரூபாய் கொள்ளை அடித்ததாக 28 வயது இளம் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுவை புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் வங்கியின் ஏடிஎம் மையத்தில், 3 லட்சத்து 90 ஆயிரம்  ரூபாய் கொள்ளை போனது. சி.சி. டிவி காமிரா காட்சி மூலம், வங்கி அதிகாரிகள் உதவியுடன் போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டனர். 

அதில், பணத்தை 28 வயது இளம் பெண் சித்ரா என்பவர் கொள்ளை அடித்தது தெரிய வந்ததால், போலீசார் அவரைக் கைது செய்துள்ளார்.

ஏ.டி.எம் மையத்தில் பணம் நிரப்பி வைக்கும் பெட்டியை வங்கி ஊழியர்கள் சரியாக பூட்டாமல் அஜாக்கிரதையாக சென்றதே இந்தக் கொள்ளைக்கு காரணம் என்பது, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சிசிடிவி காமிரா காட்சிகள் மூலம் கொள்ளை நிகழ்ந்த சில மணி நேரங்களிலேயே இளம் பெண் பிடிபட்ட சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.