பெருங்களத்தூரில் அதிகாலை முதலே கடும் நெரிசல்!

சற்றுமுன் சென்னை லைஃப் ஸ்டைல்
chennai road omr - 2026
file picture

பெருங்களத்தூரில் இன்று அதிகாலை முதலே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூரில் இன்று அதிகாலை முதலே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொங்கல் கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து ஏராளமானோர் தென் மாவட்டங்களுக்கு சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

பொங்கல் கொண்டாட்டங்கள் முடிந்த நிலையில், அரசு மற்றும் ஆம்னி பேருந்துகளிலும், சொந்த வாகனங்களிலும் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு திரும்பினர்.

இந்த நிலையில், தென்மாவட்டங்களில் இருந்து ஒரே நேரத்தில் வந்த வாகனங்களால் இன்று அதிகாலை 4 மணி முதல் 9 மணி வரை தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால் காலை நேரத்தில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு செல்வோர் அவதியடைந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.