தேசவிரோத செயல்களில் ஈடுபடும் லயோலா கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்ய ராம.கோபாலன் கோரிக்கை!

Published:

rama gopalan - 2026

தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் சென்னை லயோலா கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி நிறுவுனர் ராம.கோபாலன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

அநாகரிமாக, தேச விரோதமாக செயல்படும் லயோலா கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்து செய்து, சட்ட நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளை இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

நேற்று லயோலா கல்லூரியில், ஓவிய கண்காட்சி ஒன்றை முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் துவக்கி வைத்துள்ளார். இந்து மத நம்பிக்கைகளை கொச்சைப் படுத்தியும், மத வெறுப்பை வளர்க்கும் விதமாகவும், பாரத மாதாவையும், பாரத பண்பாட்டையும், பாரத பிரதமரையும் அவமதித்தும், எழுத்திலோ, படத்திலோ காட்டமுடியாக அநாகரிகமான ஓவியங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.

இதனை காவல்துறை தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். ஓர் அரங்கில் நடந்தாலும், இது பொது நிகழ்ச்சி. அநாகரிமான முறையில் இது போன்று வேறு மதங்களைப் பற்றியோ, அரசியல் தலைவர்களை பற்றியோ சித்திரிக்கப்பட்டிருந்தால் காவல்துறையின் நடவடிக்கை என்னவாக இருந்திருக்கும்?

ALSO READ:  அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், கொடுங்கோலன் ஔரங்கசீப் காலத்தில் நடைபெற்ற சம்பவங்களைச் சித்தரித்து ஓவிய கண்காட்சியை ஒரு பெண் நடத்தியபோது (இந்த கண்காட்சி வரலாற்று சம்பவங்களை பின்னணியில், நாகரிகமான முறையில் வரையப்பட்டிருந்தவை) தமிழக காவல்துறை தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்தது என்பதை நினைவு கூர்கிறோம்.

முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் இந்த ஓவிய கண்காட்சியை திறந்தது வைத்துடன் பார்வையிட்டிருக்கிறார். அவரது தலைமையில், வக்கிரமான, பாலியல் படங்கள் இக்கண்காட்சி நடைபெற்றிருக்கிறது என்றால், அவரது நம்பகத் தன்மையை, நடுநிலைமையை தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

மதம் என்று வரும்போது, கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் அதிகாரிகளானாலும் சரி, அரசியல்வாதிகளானாலும் சரி, அவர்கள் மதம் சார்ந்து இருப்பதோடு மட்டுமல்ல, இந்து மதத்தின் நம்பிக்கைகளை கொச்சைப்படுத்த, கேவலப்படுத்தவும் ஆதரவு தருகிறார்கள் என்பதற்கு மேலும் இந்நிகழ்ச்சி ஒரு சான்று.

தேசவிரோத, மத வெறுப்பை மக்களிடம் ஏற்படுத்தி மதக் கலவரத்தை உண்டாக்கும் தீயநோக்கோடு பல காரியங்களுக்கு லயோலா கல்லூரி மையமாக இருந்து வருகிறது. இது ஒரு தன்னாட்சி கல்லூரி என்றாலும், இந்திய சட்டத்திற்குக் கட்டுப்பட்டதே ஆகும். மேலும் மனிதவள மேம்பாட்டுத் துறையினால் தான் இக்கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

பல்கலைக்கழக மானிய நிதியை பெறும் கல்லூரியாக லயோலா கல்லூரி இருந்து வருகிறது. எனவே, தேசவிரோத செயல்களில் ஈடுபடும் லயோலா கல்லூரி அங்கீகாரத்தை மத்திய அரசு ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெறுப்பை வளர்க்கும் இக்கண்காட்சியை நடத்திய லயோலா கல்லூரி மீது சட்ட நடவடிக்கை எடுக்க தமிழக காவல்துறை அதிகாரியிடம் இந்து முன்னணி சார்பில் புகார் மனு இன்று அளிக்கப்படுகிறது.

அந்தப் புகாரின் மீது தமிழக காவல்துறை சட்டரீதியான நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

நடுநிலையாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், சமுதாய, ஆன்மிக பெரியோர்கள் அநாகரிமான, மதவெறுப்பை வளர்க்கும் இச்செயலை மனந்திறந்து கண்டிக்க முன் வரவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img