திமுக.,வை ஒடுக்கிவிட்டால் தமிழகத்தில் கொலைகார பயங்கரவாதம் ஒடுங்கிவிடும்!

சற்றுமுன் தமிழகம் புகார் பெட்டி
stalin - 2026

தமிழகத்தில் திமுக.,வை தோற்கடித்து ஒடுக்கி விட்டால் போதும், இது போன்ற கொலைகார பயங்கரவாதம் ஒடுங்கிவிடும் என்று கூறுகின்றார்கள் சமூக ஆர்வலர்கள்.

கும்பகோணம் அருகே திருபுவனத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு படுகொலை செய்யப் பட்ட பாமக., நிர்வாகி ராமலிங்கத்தின் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இஸ்லாமிய பயங்கரவாதத்தை விமர்சித்தும் பல்வேறு கருத்துகள் சமூக வலைத்தளங்களில் பகிரப் பட்டு வருகின்றன.

இந்நிலையில், தமிழகத்தில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு இப்போது இஸ்லாமிய பயங்கரவாதத்தின் கோர முகம் வெளித் தெரிவதற்குக் காரணமே திமுக.,வும் திராவிட இயக்கங்களும்தான் என்று குற்றம் சாட்டுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

இஸ்லாமிய நோன்புக் கஞ்சி குடித்துவிட்டு குல்லா போட்டு சிரிப்பதும், அங்கே மட்டும் கடவுள் இருக்கிறார் என்று கூறுவதும், இஸ்லாமிய மத திருமணம் உயர்வானது, இந்துக்கள் திருமணம் இழிவானது, இந்துக்கள் மோசமானவர்கள் என்று கூறுவதும் திமுக.,வின் இரட்டை முகத்தை பளிச்சென்று வெளிப்படுத்தியிருக்கின்றன. இந்து என்றால் திருடன் என்று ஒரு மதத்தை குறிப்பிட்டுச் சுட்டிக் காட்டிய திமுக., தலைவராக இருந்த கருணாநிதி, அதன் பின்னர் எந்தத் தேர்தலிலும் ஓட்டு பெற முடியாமல் போனது.

இப்போதும் கூட திமுக.,வின் இந்து விரோதக் கொள்கைகளையும் பேச்சையும், செயல்பாடுகளையும் விமர்சித்து, திமுக.,வில் இருந்து உணர்வுள்ள இந்துக்கள் தங்களை விடுவித்துக் கொண்டு வருகின்றனர். இந்நிலையில், திமுக.,வே இத்தகைய படுகொலைகள் நடக்கக் காரணம் என்றும், இது போன்ற படுகொலைகள் நடைபெற்றதும், உடனடி நடவடிக்கை எடுத்து, பயங்கரவாதத்தை ஒடுக்க முற்படாத ஜெயலலிதா தலைமையிலான அரசும் அதிமுக.,வும் ஒரு காரணம் என்றும், பயங்கரவாதிகளால் ஒரு பட்டியலின ஹிந்து சசிகுமார் கொல்லப் பட்ட போதும், தீவிர நாத்திகம் பேசிய திராவிட விடுதலைக் கழகத்தின் பாரூக் கொல்லப் பட்ட போதும், அரசியல் ரீதியாக எவரும் எதிர்த்துக் குரல் கொடுக்கவில்லை என்றும் கூறுகிறார்கள் சமூக வலைத்தளங்கள்.

அதனால்தான் இப்போது பாமக., பிரமுகர் படுகொலை செய்யப் பட்டிருக்கிறார் என்றும், அவரை பாமக., என்ற கட்சிக்குள் அடக்காமல், உணர்வுள்ள ஒரு ஹிந்துவாகவே பார்க்க வேண்டும் என்றும் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றனர். அதே நேரம், தமிழகத்தில் திமுக., ஒடுக்கப்பட்டால் போதும், பயங்கரவாதப் பரவலும் ஒடுங்கி, தமிழகம் தன் போக்கில் அமைதி மாநிலமாகத் திகழும் என்று கூறுகின்றனர்.

https://twitter.com/truevirathindu/status/1093373884856963072

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.