மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை!

ஆன்மிகக் கட்டுரைகள் ஆன்மிகச் செய்திகள் சற்றுமுன் நெல்லை

mandaikkadu vilakkupooja1 - 2026மண்டைக்காடு அருள்மிகு ஸ்ரீபகவதி அம்மன் திருக்கோவிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை வழிபாடு நடை பெற்றது! 

முன்னதாக, இன்று கன்னியாகுமரி மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தத் திருவிழாவில் கலந்து கொள்ள பல்வேறு நகரங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் வந்துள்ளனர். தமிழகம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள் வருகிறார்கள்.

mandaikkadu vilakkupooja2 - 2026

கோவில் திருவிழாவையொட்டி பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டு அம்மனை வழிபடுவதும் திருவிளக்கு பூஜை செய்வதும் வழக்கம்.

இன்று மாலை நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.