ஆக்ரா அருகே கால்வாயில் குப்புறக் கவிழ்ந்த சொகுசு பஸ்! 29 பேர் உயிரிழப்பு!

இந்தியா சற்றுமுன்

bus accident uttarpradesh - 2026

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து சுமார் 50 பயணிகளுடன் தில்லியை நோக்கிச் சென்றது ஈரடுக்கு அரசுப் பேருந்து.

ஆக்ரா அருகே 15 அடி ஆழத்தில் ஓடும் ஒரு கால்வாயின் மீது கட்டப்பட்ட இரு பாலங்களுக்கு இடையில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வேகமாகப் பாய்ந்து, தலைகுப்புற கவிழ்ந்தது.

இந்த கோர விபத்தில், தூக்கத்தில் இருந்த படியே ஆற்று நீரில் பலர் மூழ்கினர். சிலர் வெளியே சிரமப்பட்டு தப்பித்தனர்.

இந்த விபத்தில், பேருந்தில் பயணித்த 29 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரப்பிரதேச சாலைகள் துறை உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.