அத்திவரதரை தரிசிக்க பிரதமர் மோடி 23ஆம் தேதி காஞ்சிபுரம் வருகை!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

Athevarathar - 2026

காஞ்சி வரதராசப் பெருமாள் கோயிலில், அத்திவரதரை தரிசனம் செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் காஞ்சி நகருக்கு வருகின்றனர்.

வரும் 23 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டர் மூலமாக காஞ்சிபுரம் நகருக்கு வருகிறார்! அன்று சயனக் கோலத்தில் உள்ள அத்திவரதரை தரிசனம் செய்யும் அவர் காஞ்சிபுரத்தில் தங்கி மறுநாள் காலை நின்ற கோலத்தில் எழுந்தருளும் அத்தி வரதரை மீண்டும் தரிசனம் செய்கிறார்!

மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் மத்திய அமைச்சர்கள், தமிழக அமைச்சர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் வருகின்றனர்!

மோடி வருகையை முன்னிட்டு காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆண்கள் கல்லூரியில் ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட்டு வருகிறது! ஹெலிகாப்டர் மூலம் காஞ்சிபுரம் வரும் மோடி அங்கிருந்து குண்டு துளைக்காத கார் மூலம் காஞ்சிபுரம் கோயிலுக்கு செல்கிறார்.

மோடி வருகையை முன்னிட்டு காஞ்சிபுரம் நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன!

1 thought on “அத்திவரதரை தரிசிக்க பிரதமர் மோடி 23ஆம் தேதி காஞ்சிபுரம் வருகை!”

  1. பிரதமர் திரு மோடி , உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா காஞ்சிக்கு அத்தி வரதராஜ பெருமாள் தரிசனம் செய்ய வருவது அவர்களுக்கு கிடைக்கும் பெரிய பாக்கியம். ஆனால் திராவிட கட்சிகள் இதை ஒரு விவாதத்துக்குரிய சர்ச்சையாக ஆக்காமல் இருப்பார்களா? மழைக்காக யாகம் செய்வதையும், கையில் கயிறு நெற்றியில் திருநீறு குங்குமம் என்றிருக்கும் அதிமுக அமைச்சர்களை வாய்க்கு வந்தபடி விமர்சிப்பவர்கள் ஆயிற்றே!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.