படம் பார்த்த ஆட்சியரை படம் பிடித்த செய்தியாளர் மீது தாக்குதல்!

Published:

சேலம் மாவட்டம் ஆத்தூர் விஸ்வநாத் திரையங்கில் மாவட்ட ஆட்சியர் சம்பத் திரைப்படம் பார்ப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து நேற்று (03-02-2016) அங்கே சென்ற காலைக்கதிர் செய்தியாளர் தமிழ்ச்செல்வன், அவர் வெளியே நடந்து வரும் போது அதை செல்போனில் படம் பிடிக்க முயன்றுள்ளார். அப்போது, ஆட்சியர் சம்பத் தமிழ்ச்செல்வனைப் பிடித்து அடித்து, தாக்கிவிட்டு அவரது செல்போனை பிடுங்கிக் கொண்டு தனது பொலிரோ ஜீப்பில் தப்பிவிட்டார்.

இந்தச் சம்பவம் குறித்து அறிந்த செய்தியாளர்கள்,  மாவட்ட ஆட்சியர் சம்பத் மீது மீது நடவடிக்கை கோரி ஆத்தூர் காவல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இது குறித்து புகாரின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர்   தாக்கிய ரிப்போட்டர் தமிழ்செல்வனிடம் ஆத்தூர் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் விசாரனை நடத்தி வருகின்றனர்

Related articles

Recent articles

spot_img