மாநில பாசத்துடன் வெங்கய்ய நாயுடு பேசுகிறார்: ராமதாஸ் கண்டனம்

சென்னை: திருப்பதி வனப்பகுதியில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு மாநிலப் பாசத்துடன் கருத்துகூறியுள்ளார். அதற்கு கண்டனம் தெரிவிப்பதாக பாமக நிறுவுனர் ராமதாஸ் கூறியுள்ளார். அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்,  திருப்பதி வனப்பகுதியில் 20 தமிழர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடுவிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்ட போது, மத்திய அமைச்சராக இருப்பதால் மாநில அரசின் நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்று கூறியுள்ளார். அதேநேரத்தில், சித்தூர் வனப்பகுதியில் செம்மரக் கடத்தல் மிகப்பெரிய அளவில் நடைபெறுவதாகவும், அப்பகுதியில் தடையை மீறி பலர் நுழைந்து கடத்தலில் ஈடுபடுவதாகவும் அவர் குற்றஞ்சாற்றியுள்ளார். அதாவது தமிழகத் தொழிலாளர்கள் வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்து செம்மரக் கட்டைகளைக் கடத்துவதாகவும், அதன் காரணமாகத் தான் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்றும் வெங்கைய நாயுடு சொல்லாமல் சொல்லியிருக்கிறார். ஆந்திரம் மீது எந்த குற்றச்சாற்றையும் சுமத்தக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கும் வெங்கைய நாயுடு, கொல்லப்பட்ட தமிழகத் தொழிலாளர்களை கடத்தல்காரர்களாக சித்தரித்திருக்கிறார். திருவண்ணாமலையிலிருந்து சித்தூருக்கு கட்டிடப் பணிக்காக சென்று கொண்டிருந்த தமிழர்களை நகரி என்ற இடத்தில் பேரூந்தை வழிமறித்து ஆந்திரக் காவல்துறை பிடித்துச் சென்று சுட்டுக் கொன்றதை நேரில் பார்த்த சாட்சி உறுதி செய்திருக்கிறார். இதை அனைத்து ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டு அதன் உண்மைத் தன்மையை ஒப்புக்கொண்டுள்ளன. இவ்வளவுக்குப் பிறகும், மூத்த மத்திய அமைச்சரான வெங்கைய நாயுடு மாநில பாசத்துடன் உண்மையை மறைத்து பாதிக்கப்பட்ட தமிழர்கள் மீதே பழி சுமத்த முயன்றிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது. – என்று கூறியுள்ளார்.  

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

Entertainment News

Popular Categories