திமுக.,வினரிடம் சிக்கிய பணத்துக்கும் எனக்கும் தொடர்பில்லை!: உறவை அறுத்துக் கொண்ட துரைமுருகன்!

Published:

duraimurugan 1 - 2026தி.மு.க.,வினரிடம் சிக்கிய பணத்துக்கும் எனக்கும் தொடர்பில்லை என்று கழன்று கொண்டிருக்கிறார் திமுக., பொருளாளர் துரைமுருகன்.

வேலூரில், திமுக பொருளாளரும் சட்டமன்ற உறுப்பினருமான துரைமுருகன் வீடு, மகனுக்குச் சொந்தமான கல்லூரி, திமுக.,வினரின் வீடுகள் ஆகியவற்றில் நிகழ்த்தப் பட்ட சோதனைகளில் கோடிக்கணக்கில் பணம் சிக்கியது. வாக்காளருக்குக் கொடுப்பதற்காக, தொகுதி வாரியாக, வார்டு எண் எழுதப் பட்டு பணம் பட்டுவாடா செய்வதற்காக வைக்கப் பட்டிருந்தது கண்டறியப் பட்டு, பணம் பறிமுதல் செய்யப் பட்டது!. தொடர்ந்து, இது குறித்த அறிக்கையும் வருமானவரித்துறையினரால் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப் பட்டது.

இது குறித்த தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சோதனை மக்கள் மத்தியில் எங்கள் மீது அனுதாபத்தை ஏற்படுத்தி உள்ளது என்று கூறியுள்ள திமுக., பொருளாளர் துரைமுருகன், அந்த அனுதாபம் ஓட்டாக மாறும் என நம்பிக்கையுடன் கூறினார்.

காட்பாடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வருமான வரித்துறையினர் முன்கூட்டியே திட்டமிட்டு சோதனை நடத்தியுள்ளனர். திமுக.,வினர் வீடுகளில் சிக்கிய பணத்துக்கும், எனக்கும் தொடர்பில்லை.

எதிர்க்கட்சி வேட்பாளர்களைக் குறிவைத்து, இது போன்ற சோதனை முன்னர் எப்போதும் நடத்தப் பட்டது கிடையாது. இதன் மூலம், எதிர்க்கட்சி வேட்பாளர்களை மிரட்டுகின்றனர்.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

தேர்தல் நேரத்தில் வருமான வரித்துறை சோதனை, எப்போதும் நடந்ததில்லை. மோடி – பழனிசாமி அரசுகள், இந்த செயலில் ஈடுபட்டுள்ளன. எதிர்க் கட்சியினரை குறி வைத்து சோதனை நடத்தும் வருமான வரித்துறையினர் அதிமுக., கூட்டணிக் கட்சி வேட்பாளர்களிடம் ஏன் சோதனை நடத்தவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

duraimurugan son kadhiranandh - 2026

ஏற்கெனவே 2ஜி ஊழலில் கொள்ளை அடித்த பணம் எக்கச்சக்கமாக திமுக.,வினரிடம் உள்ளது என்று ஒரு தரப்பு கூறிக் கொண்டிருக்கும் நிலையில், கடந்த 7 வருடமாக மாநிலத்திலும் 5 வருடமாக மத்தியிலும் ஆட்சியில் இல்லாத திமுக., இன்னமும் அதிகளவு பணத்தைப் பதுக்கி வைத்துள்ளதாகக் கூறப் படுகிறது.

திமுக.,வினர் நடத்தும் பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள் மூலம் பெறப்படும் கருப்புப் பணம் இப்போது தேர்தல் நேரத்தில் வெளிப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

duraimurugan mindvoice - 2026

பண மதிப்பிழப்பு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப் பட்டும் கூட, திமுக.,வினரிடம் கோடிக்கணக்கில் பணம் சிக்குவது, பெரும் அதிர்ச்சி அளிப்பதாகவும், விஞ்ஞான முறையில் ஊழல் செய்தவர்கள், பண மதிப்பிழப்பு நடவடிக்கையையும் தோல்வியுறச் செய்து, திருட்டுத்தனமாக பணத்தை சேர்த்து வைத்துள்ளனர் என்று கூறுகின்றனர்.

ALSO READ:  நீரில்லா வைகை; வறண்டு போன மணலாற்றில் ஆடி அமாவாசை வழிபாடு!

Related articles

Recent articles

spot_img