ஈவேரா., சிலைகளை துணி மூடி மறைக்க வேண்டும்! தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கைகள்!

சற்றுமுன் சென்னை லைஃப் ஸ்டைல்

evr statue - 2026

தேர்தல் நேரத்தில் தமிழகம் முழுதுமுள்ள ஈவேரா சிலைகளை துணிகளை வைத்து மூடி மறைக்க வேண்டும் என்றும் உடனே தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்து தமிழர் கட்சி வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

இது தொடர்பாக அக்கட்சியின் நிறுவனர் தலைவர் ராம.ரவிக்குமார் விடுத்துள்ள அறிக்கையில்,  தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காண்பித்து தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அரசியல் கட்சித் தலைவர்கள் உடைய சிலைகளை எல்லாம் துணிகளை வைத்து மூடி கட்டிவைத்து மறைப்பு செய்திருக்கிறார்கள். அரசியல் கட்சிகளின் விளம்பரப் பலகைகளுக்கும் இதே நிலைதான்.

அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்கள் எடுக்கப்பட்டிருக்கிறது. இப்படி கடுமையான விதிகளை பின்பற்ற கூடிய தேர்தல் ஆணையம், தேர்தல் அதிகாரிகள் ஈ வெ ராமசாமி நாயக்கருடைய சிலைகளை மட்டும் ஏன் மறைக்கவில்லை?; துணிகளை சுற்றவில்லை.

திராவிடர் கழகம் திமுகவிற்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறது. அதுமட்டுமல்லாது இதன் தலைவர் கி வீரமணி தொடர்ந்து இந்து தெய்வங்களை இழிவுபடுத்தி பேசி வருகிறார். அப்படி இருக்கும் பொழுது ஈவேரா சிலைகளையும் துணிகளை வைத்து மூடி மறைப்பது தானே சரியான நடை முறையாக இருக்கும்.

உடனடியாக  தமிழகம் முழுக்க இருக்கக்கூடிய ஈவேரா சிலைகளை துணிகளை வைத்து மூடி மறைத்து தேர்தல் விதிகளை பின்பற்றுமாறு தேர்தல் ஆணையத்தையும், தேர்தல் அதிகாரிகளையும் இந்து தமிழர் கட்சியின் சார்பில் கேட்டுக்
கொள்கிறோம்… என்று அவர் கோரியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.