4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்… கட்சிப் பொறுப்பாளர்களை அறிவித்தது திமுக!

சற்றுமுன் சென்னை தமிழகம்

anna arivalayam - 2026

மே 19ஆம் தேதி நடைபெறவிருக்கும் 4 சட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலுகாக, கட்சிப் பொறுப்பாளர்களை அறிவித்துள்ளது திமுக., தலைமை.

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனேயே 4 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தது திமுக.

இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் முடிந்த கையோடு, இடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளுக்குமான பொறுப்பாளர்களை நியமித்துள்ளது திமுக.,
திமுக., பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில், ”சூலுார் சட்டப்பேரவை தொகுதிக்கு, எ.வ.வேலு, தென்றல் செல்வராஜ், த.மோ. அன்பரசன் ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அரவக்குறிச்சி தொகுதிக்கு க.பொன்முடி மற்றும் செந்தில் பாலாஜி, திருப்பரங்குன்றம் தொகுதிக்கு பெரியசாமி மற்றும் மணிமாறன், ஒட்டப்பிடாரம் தொகுதிக்கு கே.என்.நேரு, கனிமொழி மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.