வருண ஜபம் செய்து… மழை கொட்டித் தீர்த்து… மடையர்கள் வாயடைத்த மகேசன் திருவிளையாடல்!

madurai temple rain - 2026

குடிநீர் பஞ்சம் தவிர்க்க வேண்டி ஆலயங்களில் பர்ஜன்ய சாந்தி வருண ஜபமும், மழை வேண்டல் பதிகமும், அமிர்த வர்ஷினி, மேக ராக குறிஞ்சியும் இசைத்து பொது மக்களுக்காக இறைவனிடம் வேண்டும்படி எல்லாக் கோவில்களுக்கும் அறநிலையத்துறை சுற்றறிக்கை அனுப்பியது.

இதை திக. வீரமணி வழக்கம் போல கிண்டல் செய்து… “இதனால் எல்லாம் மழை வந்து விடுமா? அதுவும் இந்த கோடையில்….!” என்று அறிக்கை வெளியிட்டார்.

ஆறறிவு படைத்தும்… ஆன்மீகம் நாடாத… அறிவீலிகளுக்கு தக்க பாடம் புகட்டும்படி அறவழி வாழும் அன்பர்கள் அம்மையப்பரிடம் வேண்டினர். பல கோவில்களில் செய்து வருவதைப் போல மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலும் மேற்படி ஐபங்கள் நடைபெற்றன.

இந்நிலையில் மே 7ம் தேதி மதுரையின் தல அடியாரான மங்கயற்கரசியார் குருபூஜையை முன்னிட்டு, அங்கயற்கண்ணி உடனாகிய ஆலவாய் ஈசனுக்கும் திருஞானசம்பந்தர், மங்கயற்கரசியார், நின்றசீர் நெடுமா பாண்டியன், மந்திரி குலச்சிறையார், மும்மையால் உலகாண்ட மூர்த்தி நாயனார் முதலியோருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், மழை வேண்டல் பதிகமும் பாடி பண்ணிசை மாலை சூடி வழிபாடு நடைபெற்றது.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

மாலை கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் இறையருளால் வருண பகவான் மாரியாய் பொழிந்து… மதுரை மண்ணை குளிர்வித்தார்.

மதுரை மண்ணுக்கு துயர் வரும் காலங்களில் எல்லாம் ஓடி வந்து அருளும் தென்னாடுடைய ஈசன் சொக்கநாதர்… “வீணர்களின் பேச்சுக்களை வகை செய்யாதீர்.. யான் இருக்கிறேன்… மக்களை காக்க!” என்று இறங்கி வந்து அருள் விளையாடல் செய்ததாகவே அவனடியார்கள் உணர்ந்து புளகாங்கிதம் அடைந்துள்ளனர்.

இதே போல்… திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று காலை பிரம்ம தீர்த்த குளத்தில் மார்பளவு தண்ணீரில் இறங்கி சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க வருண யாகம் செய்தனர். இதில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். மேலும் இசை கலைஞர்களால் நாதஸ்வரம், வீணை, புல்லாங்குழல், மிருதங்கம் உள்ளிட்ட இசை கருவிகளால் மழை வேண்டி இசை ராகங்கள் இசைக்கப்பட்டன.

அதைத் தொடர்ந்து யாக கலசங்களை சிவாச்சாரியார்கள் கல்யாண சுந்தரேஸ்வரர் சன்னதியில் இருந்து சுமந்து வந்து பிரம்ம தீர்த்தத்தில் பூஜைகள் செய்து கலசநீர் பிரம்ம தீர்த்தத்தில் தெளிக்கப்பட்டன.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

திருவண்ணாமலையில் நேற்று மாலை 5 மணியளவில் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. சிறிது நேரத்தில் மழை வலுத்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சுமார் ½ மணி நேரம் மழை பெய்தது. சிறிது நேரம் இடைவெளிக்கு பின்னர் மீண்டும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் மழை பெய்தது.

இரவு 9.30 மணி வரை மழை நீடித்தது. இதனால் அருணாசலேஸ்வரர் கோவில் வளாகம் முழுவதும் மழை தண்ணீர் தேங்கியது. கிரிவலப்பாதையில் பல இடங்களில் மழை நீர் குட்டை போல் தேங்கியுள்ளது. திருவண்ணாமலையில் பெய்த மழையின் காரணமாக பக்தர்கள் பரவசமடைந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

Topics

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories