வேன் பைக் மோதல்; தீப்பிடித்த நிலையில் இருவர் உயிரிழப்பு!

கிரைம் நியூஸ் சற்றுமுன் நெல்லை

srivaikuntam accident two died - 2026

தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள புதுக்குடியில் இரு சக்கர வாகனம் மீது வேன் மோதிய விபத்தில் பைக்கில் வந்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்த சாமிநாதன் என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில் தனது நண்பருடன் சேர்ந்து ஸ்ரீவைகுண்டம் சென்று கொண்டிருந்தார். அப்போது ஸ்ரீவைகுண்டத்தை அடுத்துள்ள புதுக்குடி அருகே எதிரே வந்த வேன் மோதியதில் இரு சக்கர வாகனம் தீப்பிடித்தது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் தீயில் கருகி உயிரிழந்தார் மற்றொருவரும் இந்த விபத்தில் உயிரிழந்தார்.

இது குறித்து ஶ்ரீவைகுண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் திருநெல்வேலி திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.