நேற்று ராவ்… இன்று நாயுடு… திமுக.,வின் ’சார்பற்ற’ சந்திப்புகள்!

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

duraimurugan naidu - 2026

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஸ்டாலினை நேற்று சந்தித்த நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் திமுக பொருளாளர் துரைமுருகன் சந்தித்துள்ளார்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் திமுக பொருளாளர் துரைமுருகன் இன்று சந்தித்துப் பேசினார். துரைமுருகனுடன் அவரது மகனும் வேலூர் தொகுதியின் வேட்பாளராக திமுக., சார்பில் நிறுத்தப் பட்டவருமான கதிரும் உடன் இருந்தார்.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஸ்டாலினை நேற்று சந்தித்துப் பேசினார். தமிழகம் வந்திருந்த சந்திரசேகர ராவ், கடந்த மாதமும் சந்தித்துப் பேசியிருந்தார். அப்போதும், மூன்றாவது அணி குறித்துப் பேசப்பட்டது. தற்போதைய அரசியல் சூழலில் மூன்றாவது அணி, காங்கிரஸ் அல்லாத மாற்று அணி என்பது குறித்தெல்லாம் பேசியதாகவும், ஆனால், ஸ்டாலின் சந்திரசேகரராவை காங்கிரஸ் அணிக்கு வருமாறு கூறியதாகவும் செய்திகள் வெளியாயின.

இந்நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் திமுக பொருளாளர் துரைமுருகன் சந்தித்துப் பேசியுள்ளது, தாங்கள் இரு தரப்பிடமும் பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதை வெளிப்படுத்தியுள்ளது திமுக.,!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.