குமரியில் வைகாசி விசாகத் திருவிழா! யானை மீது வெள்ளிக் குடத்தில் புனித நீர்!

Published:

kanyakumari vaikasi visaka - 2026

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு, நேற்று யானை மீது வெள்ளிக் குடத்தில் புனித நீர் ஊர்வலமாக எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 9-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் 4-ஆம் நாள் விழாவான நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெற்றது.

இதை முன்னிட்டு, அம்மன் வெள்ளி காமதேனு வாகனத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து அம்மனுக்கு விசேஷ வழிபாடு, தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.

விழாவில் நேற்று அதிகாலை 5 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கரிக்கப் பட்ட சிம்ம வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வருதல், காலை 9 மணிக்கு கன்னியாகுமரி விவேகானந்தபுரம் சக்கர தீர்த்த விநாயகர் கோவில் கிணற்றில் இருந்து வெள்ளி குடத்தில் புனித நீர் அலங்கரிக்கப்பட்ட யானை மீது ஊர்வலமாக எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

ஊர்வலம் கோவிலை அடைந்ததும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு எண்ணை, பால், பன்னீர், சந்தனம் உள்பட பல்வேறு பொருட்களுடன், புனித நீரால் அபிஷேகம் நடந்தது. மதியம் அன்னதானம், இரவு 8 மணிக்கு சிம்ம வாகனத்தில் அம்மன் எழுந்தருளி பவனி வரும் நிகழ்ச்சி ஆகியவையும் நடைபெற்றன.

Related articles

Recent articles

spot_img