மிஸ் சௌத் இண்டியா அழகிப் பட்டம் பறிப்பு! சிக்கலில் நடிகை மீரா மிதுன்!

சற்றுமுன் சினி நியூஸ் தமிழகம் லைஃப் ஸ்டைல்

Meera Mithun 8 - 2026மிஸ் சௌத் இந்தியா என்ற அழகிப் பட்டத்தை தவறாகப் பயன்படுத்தி முறைகேடு செய்ததால், அழகிப் பட்டத்தை திரும்பப் பெறுவதாக மிஸ் சவுத் இந்தியா அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், மிஸ் சௌத் இந்தியா பட்டத்தை எங்கும் பயன்படுத்தக் கூடாது என்றும் கட்டுப்பாடு விதிக்கப் பட்டுள்ளது.

பெங்களூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி, தனது பெயரை மீரா மீதுன் என மாற்றிக் கொண்டு அழகிப் போட்டிகளில் பங்கேற்றார். மிஸ் குயின் ஆஃப் சவுத் இந்தியா, மிஸ் தமிழ்நாடு, மிஸ் சவுத் இந்தியா ஆகிய போட்டிகளில் அழகிப்பட்டம் வென்றார். பின்னர் படங்களில் நடிக்கவும் தொடங்கினார்.

இந்நிலையில், அவருக்கு ஓர் எண்ணம் தோன்றியது. தாமே அழகிப் போட்டி நடத்தினால் என்ன என்ற அந்த எண்ணம்தான் அவரை சிக்கலில் தள்ளியுள்ளது.

தமிழ்ப் பெண்களுக்கு அழகிப் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்புகள் பெரிதாகக் கிடைப்பதில்லை என்று கூறி, தமிழ்ப் பெண்களுக்காக அழகிப் போட்டி நடத்துவதாக முடிவு செய்தார் மீரா மிதுன். அந்த அழகிப் போட்டி, ஜூன் 3-ஆம் தேதி ஏற்பாடு செய்யப் பட்டிருப்பதாக இரு தினங்களுக்கு முன்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தாம் அந்த நிகழ்ச்சியை நடத்தக் கூடாது என்று அஜித் ரவி, ஜோ மைகேல் என இருவர் மிரட்டுவதாக காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். மேலும், தனது சமூக வலைதளங்களை முடக்கி தவறான பதிவுகள் போடுவதாகவும், அவர்களிடம் இருந்து மட்டுமல்லாமல், புதிய எண்களில் இருந்தெல்லாம் தமக்கு மிரட்டல் வருவதாகவும் சென்னை காவல் ஆணையரிடன் புகார் அளித்தார்.

meera mithun - 2026இந்நிலையில், மீராமிதுன் அழகிப் போட்டி நடத்த அனுமதியே பெறவில்லை என்றும், அவர் அழகிப்போட்டி நடத்துவதாகக் கூறி பல பெண்களிடம் பணம் வாங்கி மோசடி செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால், மிஸ் சௌத் இந்தியா பட்டத்தை மீரா மிதுன் தவறாகப் பயன்படுத்தி மோசடி செய்வதால் 2016 -ஆம் ஆண்டு தாங்கள் வழங்கிய மிஸ் சௌத் இந்தியா பட்டத்தை ரத்து செய்வதாக அந்த அமைப்பு டிவிட்டர் பதிவில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.. மேலும், மீரா மிதுன் இந்தப் பட்டத்தை வேறு எங்கும் பயன்படுத்தக்கூடாது என்றும் எச்சரித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.