இசை என்ற ராஜேஸ்வரி கொடுத்த பாலியல் புகார்! முகிலன் கைது செய்யப்பட வாய்ப்பு!

கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்

mukilan rajeswari - 2026

முகிலன் மீது இசை என்ற ராஜேஸ்வரி என்பவர் அளித்த பாலியல் வன்கொடுமை வழக்கு குளித்தலை காவல் நிலையத்தில் இருந்து சிபிசிஐடி போலீசுக்கு மாற்றம் செய்யப் பட்டுள்ளது. இந்த வழக்கின் அடிப்படையில் முகிலனை சிபிசிஐடி போலீசார் கைது செய்ய வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வெளியாகின.

சமூக செயற்பாட்டாளர் என்று தன்னை அடையாளப் படுத்திக் கொண்ட முகிலன் என்பவர், தமிழக காவல் துறையால் தேடப்படும் நபர் ஆனார். நீதிமன்றத்தில் கொடுக்கப் பட்ட ஆட்கொணர்வு மனு மூலம், அவரைத் தேடிக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டிய பொறுப்பு சிபிசிஐடி போலீஸாருக்கு வந்தது.

rajeswari2 - 2026இருப்பினும், தன்னை தமிழக அரசு தேடுவது அறிந்தும், ஆந்திரத்தில் போய் பதுங்கிக் கொண்டார் முகிலன். முன்னதாக முகிலன் மீது இசை என்ற ராஜேஸ்வரி என்பவர் பாலியல் குற்றச்சாட்டுகளைக் கூறியிருந்தார்.

முகிலன் என்னை கற்பழித்து விட்டார்! உடன் போராட்டக் களத்தில் இருந்த பெண் புகார்!

முகிலன் மீது கரூர் மாவட்டம் குளித்தலை போலீசில் புகாரும் அளித்திருந்தார். போராட்டக் களத்துக்குச் செல்லும் போதெல்லாம் தன் உடலை அவர் பயன்படுத்திக் கொண்டதாக அவர் கூறியிருந்தார். தன்னை ஏமாற்றிவிட்டதாக அவர் கூறிய பாலியல் குற்றச்சாட்டின் அடிப்படையில் குளித்தலை போலீஸாரும் முகிலனை தேடிக் கொண்டிருந்தனர்

காணாமல் போக்கிக் கொண்டுள்ள ‘முகிலன்’: தேர்தலுக்காக ஒளிந்து கொண்டு அரசியல் செய்கிறார்?!

இந்நிலையில், இந்தப் புகாரை சிபிசிஐடி போலீஸார் மாற்றிக் கொண்டுள்ளனர். எனவே இந்தப் புகாரில் அவர் கைது செய்யப் பட்டு, அவரிடம் விசாரணை நடத்தப் படலாம் என்று தெரிகிறது. இத்தனை நாட்கள் அவர் என்ன செய்தார், நக்ஸல் இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தாரா என்றெல்லாம் விசாரணை நடத்தப் படும் என்று தெரிகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.