கடைசியில ஆர்யா கதியும் இதுதான்!.. ஓடிடியில் வெளியாகும் புதிய படம்…

Published:

teddy

கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் தற்போது பல திரைப்படங்கள் அமேசான் பிரைம்,நெட்பிளிக்ஸ், ஹாட் ஸ்டார் போன்ற ஓடிடியில் வெளியாகி வருகிறது. இதில், சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படம் முக்கிய படமாகும். இப்படம் நல்ல வசூலையும் கொடுத்துள்ளதால் பல திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகிறது.

இந்நிலையில், நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள டெடி திரைப்படமும் ஓடிடியில் வெளியாகவுள்ளது. இப்படத்தை மிருதன்,டிக் டிக் உள்ளிட்ட படங்களை இயக்கிய சக்தி சவுந்தரராஜன் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஆர்யாவின் மனைவியும் நடிகையுமான சாயிஷா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

Source: Vellithirai News

Related articles

Recent articles

spot_img