ஆரோக்கிய சமையல்: குதிரை வாலி கரும்பு சாறு சர்க்கரைப் பொங்கல்!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
Horse Valley Cane Juice Pongal
Horse Valley Cane Juice Pongal

குதிரை வாலி கரும்பு சாறு பொங்கல்

தேவையான பொருட்கள்

1கப். குதிரைவாலி
1/2 கப் பாசிப்பருப்பு
1.5 கப் வெல்லம்
6 கப் கரும்பு சாறு
5 ஸ்பூன். நெய்
1/2 ஸ்பூன் ஏலக்காய் தூள்

  • முந்திரிபருப்பு
  • உலர் திராட்சை

செய்முறை
மேற்கூறிய தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அரைக்கப் பாசிப்பயிரை வாணலியில் நன்கு வறுத்துக் கொள்ளவும். ஒரு கப் குதிரைவாலியை எடுத்து தண்ணீரில் நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். வறுத்த பாசிப் பருப்பையும் கழுவி கொள்ளவும். இரண்டையும் கால்மணி நேரம் 5 கப் கரும்புச் சாற்றில் ஊறவைக்கவும். (இந்தக் கரும்புச் சாற்றில் ஊறிய குதிரைவாலியை அப்படியே வேக வைக்க வேண்டும்.)

இதற்கிடையில் வெல்லம் 1.5 கப் உடைத்து கொள்ளவும். ஒரு கப் கரும்புச்சாற்றில் வெல்லத்தை கரைத்து வைத்துக் கொள்ளவும். நெய்யில் முந்திரிப்பருப்பு மற்றும் திராட்சையை வறுத்து வைத்துக் கொள்ளவும். ஏலக்காய் தூள் அரை ஸ்பூன் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

கால் மணி நேரம் குதிரைவாலி மற்றும் பாசிப்பருப்புஊறிய பிறகு கரும்பு சாற்றுடன் அப்படியே பிரஷர் குக்கரில் சேர்த்து 6 விசில் விடவும். குதிரைவாலி நன்கு வெந்து கொள்ளும்.

இப்போது நன்றாக வெந்த குதிரைவாலி உடன் கரும்பு சாற்றில் ஊற வைத்த வெல்லத்தை சேர்த்து நன்கு கலந்து விட்டு கொதிக்க விடவும். வெல்லம் நன்கு கலந்து வெந்த பின் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை,மற்றும் ஏலக்காய் தூளை சேர்த்து நன்கு கலந்து விடவும்.

சுவையான ஆரோக்கியம் நிறைந்த குதிரைவாலி கரும்புச்சாறு இனிப்பு பொங்கல் ரெடி. குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடுவார்கள். கரும்புச்சாறு மணத்துடன் சுவையாக இருக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.