ஜம்முனு டேஸ்ட் பண்ண முலாம்பழ ஜாம்!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
jam
jam

முலாம்பழ ஜாம்

தேவையானவை:

முலாம்பழ விழுது, பப்பாளி விழுது – தலா ஒரு கப்
சர்க்கரை – 2 கப்

செய்முறை:

முலாம்பழம் மற்றும் பப்பாளி பழத்தின் தோல், விதைகளை நீக்கி விட்டு சிறிய துண்டுகளாக நறுக்கவும். பழத் துண்டுகளை மிக்ஸியில் போட்டுத் தண்ணீர்விடாமல் விழுதாக அரைத்தெடுக்கவும். அரைத்த விழுதின் அளவுக்குச் சர்க்கரையை எடுத்துக்கொள்ளவும்.

அடிகனமான பாத்திரத்தில் அரைத்த விழுது மற்றும் சர்க்கரையைச் சேர்த்து அடுப்பில் வைத்துக் கைவிடாமல் கிளறவும். கிளறும் போது கரண்டியை தூக்கிப் பார்த்தால், ஜாம் கரண்டியிலிருந்து வேகமாக விழாமல், மெதுவாக விழும் பதத்தில் இறக்கவும். சுத்தம் செய்து வெயிலில் காய வைத்த கண்ணாடி பாட்டில்களில் ஜாமைச் சூடாக இருக்கும்போதே போடவும். ஜாம் ஆறிய பிறகு பாட்டிலை மூடவும். (ஆறிய உடன் ஜாமை பாட்டிலில் ஊற்றினால் ஜாம் இறுகி பாட்டிலில் போட வராது.)

குறிப்பு: ஃபுட் கலர் சேர்க்கத் தேவையில்லை. சிவப்பு நிற பப்பாளியைச் சேர்த்தால் ஜாம் ஆரஞ்சு கலரில் வரும்.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: முன்னேற்பாடுகள் தீவிரம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.