டோக்கியோ ஒலிம்பிக்: மூன்றாம் நாளில் இந்தியா!

லைஃப் ஸ்டைல் விளையாட்டு
olympic meerabai - 2026
ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானு இந்தியா திரும்பினார்

டோக்கியோ ஒலிம்பிக்கில் மூன்றாம் நாள்
– முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன் –

இரண்டாம் நாள் போட்டிகளில் பல போட்டிகளில் ஏமாற்றமளிக்கும் முடிவுகளுக்குப் பின்னர் மூன்றாம் நாளில் தங்கள் விளையாட்டு வீரர்களிடமிருந்து சிறந்த செயல்திறனை இந்தியா எதிர்பார்த்தது.

ஃபென்ஸிங் என அழைக்கப்படும் வாள் வீச்சில் தமிழக வீராங்கனை பவானி தேவி முதல் ஆட்டத்தில் ஒரு வெற்றியைப் பெற்றார். ஆனால் தனது அடுத்த 32-சுற்று ஆட்டத்தில் தோல்வியுற்றார்.

அதானு தாஸ், பிரவீன் ஜாதவ், மற்றும் தருண்தீப் ராய் ஆகியோர் அடங்கிய இந்திய ஆண்கள் வில்வித்தை அணி காலிறுதியில் கொரியாவிடம் தோற்றது.

ஷரத் கமல் டேபிள்டென்னிஸில் தனது இரண்டாவது சுற்று போட்டியில் போர்ச்சுகலுக்கு எதிராக வென்றார், ஆனால் அது சக வீராங்கனை சுதிர்தா முகர்ஜி தோற்றுப்போனார்.

பூப்பந்து போட்டியில், சத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோர் ஆண்கள் இரட்டையர் இரண்டாவது சுற்றில் தோல்வி.

டென்னிஸ் வீரர் சுமித் நாகல் உலக நம்பர் 2 டேனியல் மெட்வெடேவிடம் 2-வது சுற்றில் தோற்றார்.

ஆண்களின் ஸ்கீட் துப்பாக்கி சுடும் போட்டியில் அங்கத் வீர் சிங் பஜ்வா 18 வது இடத்தையும், மைராஜ் அகமது கான் 25 வது இடத்தையும் பிடித்தனர். அடுத்த சுற்றுக்கு தகுதி பெறவில்லை.

டேபிள் டென்னிசில் தனது மூன்றாம் சுற்றில் உலகத் தர வரிசையில் 17ஆவது இடம் பெற்றுள்ள சோபியா போல்கனோவாவிடம் மணிகா பத்ரா 4-0 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியடைந்தார்.

32 வது சுற்றில் சீனாவின் டுஹோட்டாவுக்கு எதிராக குத்துச்சண்டை வீரர் ஆஷிஷ்குமார் போராடித் தோற்றார்.

ஆண்கள் 200 மீட்டர் பட்டாம்பூச்சி போட்டியில் 38 ல் 24 வது இடத்தை சஜன் பிரகாஷ் பெற்றதால் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறவில்லை.

இந்திய பெண்கள் ஹாக்கி அணி ஜெர்மனிக்கு எதிராக இன்று ஆடியது. 2-0 என்ற கோல் கணக்கில் தொற்றுப் போனது. இந்தியா தனது முதல் போட்டியில் 1-5 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்திடம் தோற்றது.

ஒவ்வொரு குரூப்பிலிருந்தும் நான்கு அணிகள் காலிறுதிப் போட்டிக்குச் செல்லும். அயர்லாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டங்கள் எஞ்சியிருப்பதால், தகுதி பெற இந்தியாவுக்கு இன்னும் சிறந்த வாய்ப்பு உள்ளது.

படகுப் போட்டியில் விஷ்ணு சரவணன் மற்றும் நேத்ரா குமணன் ஆகியோர் முறையே ஆண்கள் லேசர் பந்தயத்திலும் பெண்களின் லேசர் ரேடியல் பந்தயத்திலும் போட்டியிட வேண்டும். ஆனால் சீரற்ற வானிலை அவர்களின் நிகழ்வுகளை நிச்சயமற்றதாக ஆக்கியுள்ளது.

நீச்சல் போட்டியில் சாஜன் பிரகாஷ் அரையிறுதிக்கு தகுதி பெறத் தவறிவிட்டார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.