varaku curd rice
varaku curd rice

வரகு தயிர் சாதம்
தேவை: வரகு – 200 கிராம், பால் – 200 மில்லி, தயிர் – ஒரு கப், கடுகு, உளுந்து, கறிவேப்பிலை – தாளிக்கத் தேவையான அளவு, கொத்தமல்லித்தழை – சிறிதளவு, பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்), இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு, எண்ணெய் – 3 டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.


செய்முறை:
வரகை இருபது நிமிடங்கள் ஊறவிட்டுக் களைந்து தண்ணீரை வடித்துவைக்கவும். பிறகு இதனுடன் 200 மில்லி பால் மற்றும் 400 மில்லி தண்ணீர் சேர்த்து குக்கரில் நான்கு விசில் வரும்வரை வேகவிடவும். ஒரு வாணலியைச் சூடாக்கி, எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளிக்கவும். இதனுடன் பெருங்காயத்தூள், இஞ்சித் துருவல், பச்சை மிளகாய் சேர்த்துப் புரட்டி இறக்கவும். இதை வேகவைத்துள்ள சாமை சாதத்தில் சேர்த்து நன்கு கிளறவும் (சாதம் இறுகலாக இருப்பின் கொஞ்சம் வெந்நீர் அல்லது பால் ஊற்றி, சற்று நெகிழ்வாகக் கலந்துகொள்ளலாம்). கூடவே தேவையான அளவு உப்பு சேர்த்து மறுபடியும் கிளறவும். பின்னர் இதனுடன் தயிர் சேர்த்துக் கிளறவும். கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வஸ்திரம் மரியாதை!


குறிப்பு: லஞ்சுக்கு, பயணங்களுக்கு, எடுத்துச் செல்லும்போது ஒரு ஸ்பூன் தயிர் மட்டும் சேர்த்துக் கலந்து எடுத்துச் செல்லலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending