தலிபானின் ‘ப்ரஸ் மீட்’டில் இதெல்லாம் சொல்ல மாட்டாங்க..! இங்கயும்… தான்!

Published:

journalist attacked by taliban
journalist attacked by taliban

தலிபான்களிடம் இந்திய அரசு இந்திய முஸ்லீம்களுக்காக கண்டிப்பாக பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்! ஆப்கானியர்களிடம் படித்த பாடத்தை இந்திய முஸ்லீம்களிடம் நடைமுறைப்படுத்த வேண்டும்….

இந்த படத்தை நன்றாக பார்த்துக் கொள்ளவும். அடித்துத் தோலை உரிப்பது என்றால் என்ன என்பதற்கான நேரடி உதாரணம் இது.
LAtimes நிறுவனத்தின் புகழ்பெற்ற புகைப்பட பத்திரிகையாளர் வெளியிட்டுள்ள புகைப்படம் இது. ஆப்கானிஸ்தானில் எடுக்கப்பட்ட புகைப்படம்.

இவர்கள் போட்டிக் குழுவின் தீவிரவாதிகளோ அல்லது தொழிலுக்கு இடையூறு செய்யும் பயங்கரவாதிகளோ அல்லது போதைப்பொருள் கடத்துபவர்களோ அல்லது மிகவும் ஆபத்தான சக்திகளோ அல்ல. ஊடகவியலாளர்கள். ஜர்னலிஸ்ட் என்பதாக எளிய மொழியில் சொல்வார்கள்.

இவர்களின் பெயர்கள் – நேமட் நக்தி & தகி தர்யாபி.
இவர்கள் செய்த குற்றம் – காபூலில் பெண்கள் திரண்டு பயங்கரவாத தாலிபான் காட்டுமிராண்டிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தியதை இந்த ஜர்னலிஸ்ட்கள் படம் பிடித்து உலகிற்கு காட்டியது.

இங்கேயும் தாலிபான் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக பல குரல்கள் தொடர்ந்து ஒலித்த வண்ணம் உள்ளன. நேற்று கூட காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முஃப்தி சில நிபந்தனைகளுடன் கூடிய வாழ்த்துப்பா பாடியுள்ளார்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

நாசகாரர்களின் கூடாரமான “The Wire” பத்திரிகையில் சில வாரங்களுக்கு முன்பாக “தாலிபான்கள் வந்து விட்டதால் எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்கள் அதிகரிக்கும் என்ற இந்தியாவின் கவலை ஆதாரமற்றது” என்று கஜாலா வஹாப் என்பவன் எழுதியிருந்தான். அல் ஜசீராவில் வெளியான கட்டுரை எல்லாம் வேறு லெவல்! ரத்தக் கொதிப்பு 500ஐ தாண்டி விடும் அதனை படித்தால்.

தாலிபான் புகழ்பாடிகள், “சீர்திருத்தம் பெற்ற” தாலிபானுக்கு வாழ்த்துப்பா பாடுபவர்கள் என அனைவருக்கும் இந்த புகைப்படம் தான் ஒரே சான்று. அவர்கள் கொண்டு வர விரும்பும் “மறுமலர்ச்சி” இதுதான்.

“ப்ரஸ் மீட்” நடத்திய தாலிபான்களுக்கு போற்றிப் புகழ்ந்து எக்காளமிட்ட எவனும் இதைக் குறித்தெல்லாம் மூச்சு கூட விட மாட்டான்! There lies the caveat.

  • மு.சந்திரன்

Related articles

Recent articles

spot_img