கூப்பிட்டு வந்து கும்மியடித்த ஸ்டாலின்! நாயுடுவுக்கு ஆப்படித்த அறிவிப்பு!

Published:

IMG 20181216 WA0031 - 2026

ராகுல் காந்தியே வருக நல்லாட்சி தருக என்று ஸ்டாலின் கூறியிருப்பது ஊடக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது!

ஏனென்றால் ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என்று இந்தியாவில் எந்த மாநில கட்சியும் இதுவரை கூறவில்லை; இடதுசாரிகள் இப்போது கூட அவ்வாறு கூறவில்லை!

தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகுதான் பிரதமர் பற்றிய முடிவு அறிவிக்கப்படும் என்று கூறுகிறார்கள்! மதிமுக விடுதலை சிறுத்தைகள் ஆகியவற்றுக்கும் அதிர்ச்சி தான்!

ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என்று
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இதில் உள்ளூர அதிர்ச்சி அடைந்துவிட்டார் என்று ஊடக நண்பர்கள் கூறினார்கள்! ஏனென்றால் அவரது ஓட்டு வங்கி காங்கிரஸ் எதிர்ப்பு ஓட்டு வங்கி!

ஜூன் மாதம் ஆந்திராவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற வேண்டும்! நாடாளுமன்ற தேர்தலை சேர்த்து நடத்த வாய்ப்பு இருக்கிறது! அப்படி என்றால் சட்டமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய வேண்டியது வரும்!

ALSO READ:  சாவர்க்கரும் ஜனநாயகமும்

இதுபோன்ற பல குழப்பங்கள் சந்திரபாபு நாயுடுவுக்கு ஏற்பட்டதாக கூறப்பட்டது!

எனவே மு க ஸ்டாலின் கூறியது அவசரமாக எழுப்பப்பட்ட குரலா, அல்லது ஓபிஎஸ் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் பதவி இழப்பை எதிர்பார்த்து சட்டமன்றத் தேர்தலும் வரும் என்ற எண்ணத்தில் கூறுகிறாரா?

சட்டமன்றத் தேர்தல் சேர்ந்து வந்தால் காங்கிரஸ் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் அதிக இடங்களை ஒதுக்கி விட்டு சட்டமன்றத்தில் திமுக அதிக இடங்களை எடுத்துக் கொள்ளலாம் என்று திட்டமிடுகிறாரா?

  • ‘தராசு’ ஷ்யாம்

Related articles

Recent articles

spot_img