பசும்பொன் தா.கியார் நினைவுநாள் அஞ்சலி!

Published:

tha kiruttinan - 2026

பசும்பொன் தா. கியார் நினைவுநாள் அஞ்சலி

காலங்கடந்த மாமனிதர்

பசும்பொன்னே!!

கோவலனுக்கு நீதி வழங்கிய
பாண்டியன் ஆண்ட மண்ணில்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
முன்னாள் தமிழக நெடுஞ்சாலை அமைச்சர்
கட்சிக்குத் தன்னை அர்ப்பணித்து
உழைப்பில் உயர்ந்த கொள்கை வீரர்
பாராளுமன்றப் பணியிலும்
தமிழக நெடுஞ்சாலையின்
அமைச்சுப் பணியில் மாநிலம்
முழுவதும் செயலாற்றிய நேர்த்தியைக் கண்டு
போற்றிய நினைவிலும் கைகூப்பி நிற்கின்றோம்.

ஓடிஓடி உழைத்த உத்தமரை
நீதி காத்த மதுரை மண்ணினில்
இரத்தம் கொட்ட மாய்த்து விட்டாயே!!

இங்கு தெய்வம் இருக்கிறதா?
கொள்கைச் சான்றோர் இருக்கிறார்களா? என்று
உறவும், நட்பும், தொண்டர்களும்…
உத்தமர் பசும்பொன் தா. கிருட்டிணன் நினைவு நாளில்
புலம்பித் தவிக்க விட்டு விட்டாயே!

நீதி தேவதையே!
உன் கண்ணைக்
கொஞ்சம் திறந்து பார்க்கக்
கைகூப்பி வணங்கி நிற்கிறேன்.

  • முனைவர் பெ. சுபாசு சந்திர போசு
  • (பிரிஸ்கோ, டெக்டாஸ், அமெரிக்கா – நாள்:20.05.2022
ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மணிப்பூர்

Related articles

Recent articles

spot_img