Homeஅரசியல்மே 19: நாதுராம் விநாயக் கோட்சே பிறந்த தினம்!

மே 19: நாதுராம் விநாயக் கோட்சே பிறந்த தினம்!

பிறப்பு யாருக்கும் தெரியாமல் போகலாம். ஆனால் இறப்பு சரித்திரமாக இருக்கவேண்டும். அந்த சரித்திரம் உன்னதமான விஷயத்தை கொண்டு இருக்க வேண்டும்

godse - Dhinasari Tamil

மே மாதம் 19 ஆம் தேதி #நாதுராம்விநாயக்கோட்சே பிறந்த தினம் இன்று.

பிறப்பு யாருக்கும் தெரியாமல் போகலாம். ஆனால் இறப்பு சரித்திரமாக இருக்கவேண்டும். அந்த சரித்திரம் உன்னதமான விஷயத்தை கொண்டு இருக்க வேண்டும் அல்லது உன்னத விஷயத்தை தாங்கி பிடித்த வாழ்க்கையாக இருக்க வேண்டும்.

இப்படி பாடம் சொன்ன வாத்தியார் தான் நாதுராம் விநாயக் கோட்சே.

நிஜத்திலும் அவர் பள்ளியில் வகுப்பாசியராக சுவைபட, பொருள் பட சொல்லிக்கொடுப்பதில் வல்லவர். அனைவரிடமும் மென்மையாக பழக கூடியவராக இருந்திருக்கிறார்.

1910 ஆம் ஆண்டு பூனே அருகில் உள்ள பாராமதியில் விநாயக் வாமனராவ் கோட்சே, லக்ஷ்மி தம்பதியினருக்கு மகனாக பிறந்தவர் இவர்.

நாதூராம் என்பதே ஒர் பட்டப்பெயர் தான். பெருமாள் பிச்சை என்பது போல. அவரின் பெற்றோர்களுக்கு பல குழந்தைகள் பிறந்து இறந்து சமயத்தில் அடுத்தாக பிறக்கும் குழந்தைக்கு மூக்கு குத்தி நேர்ச்சை செய்வதாக வேண்டி கொள்ள பிறந்த குழந்தை…… ஆணாக இவர் பிறந்தார். ஆனாலும் வேண்டிக்கொண்டது போல் இவருக்கும் மூக்கு குத்தப்பட்டு சுமார் 9 வயது வரை மூக்குத்தி அணிவித்து இருந்தனர் அவரது பெற்றோர். பின்னாளில் மூக்குத்தி அகற்றப்பட்ட பின்னரும் அந்த ஓட்டை மறையாமல் இருந்து வந்தது. அதனால் தான் அந்த மூக்கு ஓட்டையை, நாசி துவாரத்தை அடையாளப் படுத்தும் பட்டப் பெயர் நாதூராம்.

பல சமயங்களில் பல இடங்களில் இதன் பொருட்டு கிண்டல் கேலி பேசிய சம்பவம் நடந்துள்ளது.

ஆனாலும் ஆசிரியராக திறம் பட பாடம் நடத்துபவர் என்று பெயர் எடுத்தார். எந்த சூழ்நிலையிலும் அதிர்ந்து பேசாமல் சாத்வீகமாக அதே சமயம் தீர்க்கமாக கருத்துக்களை முன் வைத்து ஆழமாக பேசக்கூடியவர் என்று பெயர் எடுத்து இருந்தார். அமைதியான பயந்த சுபாவம் கொண்டவராக இருந்திருக்கிறார். இவர் பிறப்பால் ஒரு #பிராமணர். ஆம் நாதூராம் விநாயக் கோட்சே பிராமண குடும்பத்தில் பிறந்தவர்.

அதனால் காந்தி வேதத்தை குறித்து தவறான கண்ணோட்டம் கொண்ட நபராக…… தவறான பல கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்புவதாக இவருக்கு சொந்த அபிப்ராயம் இருந்தது…. இருந்திருக்கிறது.

போதாகுறைக்கு இந்துக்கள் படும் அல்லல்களுக்கு இவரது தவறான போதனைகள் தான் காரணம் என்று திடமாக எடுத்துச் சொல்லி வந்திருக்கிறார். வர்ணாசிரம தர்மத்தை குறித்து தவறான பிரச்சாரம் செய்து வேதத்தை தவறு சொல்லி புதிதாக தான் ஒரு குலத்தை உண்டு பண்ணி இருப்பதாக அந்நாளில் சொன்னார் காந்தி. அதற்கு #ஹரிஜன் என்று பெயரும் கொடுத்திருந்தார் அவர்.

இதனை எல்லாம் பொறுக்க மாட்டாமல் அவரிடம் கேள்வி கேட்க அதனை உதாசீனம் செய்து வந்திருக்கிறார்., காந்தி.

ஆதலால் அவரை திருத்துவதை காட்டிலும் கொல்வதே சரி என்று முடிவுக்கு வருகிறார்கள் பலரும் அன்றைய நாளில்.

காந்தியை கொல்ல துடித்த, கொல்ல முயற்சி செய்த பலருள் இவர் மாத்திரமே அத்திட்டத்தை தனித்து நிறைவேற்றி இருந்தார். காரணம் காந்தி, முஸ்லிம்கள் மீது காட்டிய கரிசனம்.

சுதந்திரம் வேண்டி போராடிய ஆரம்ப காலத்தில் இருந்தே முஸ்லிம் மக்கள் பெரிதாக இதில் ஈடுபாடு காட்டாமல் இருந்து வந்தனர், பின்னர் காங்கிரஸ் கட்சியின் குளறுபடிகளால் தங்களுக்கு என்று தனியாக ஒரு தேசம் வேண்டும், இந்துக்கள் தங்களை தங்கள் நாட்டில்

(நன்கு கவனியுங்கள், இந்தியா இந்துக்களின் தேசம் என்பது முஸ்லிம் லீகின் அன்றைய வாதம்) நிம்மதியாக வாழ விட மாட்டார்கள் என்று கலகக் குரல் உயர்த்தினார்கள்.

இஃது பெரிய அளவில் காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பில் சுபாஷ் சந்திர போஸை தேர்ந்தெடுக்கப்பட்ட சமயத்தில் நடந்தது. காங்கிரஸ் கட்சியின் உயர் மட்ட பொறுப்பில் இருந்த கிட்டத்தட்ட 13 பேர் வாக்கு அளித்து சுபாஷ் சந்திர போஸை தேர்ந்தெடுத்து இருந்தனர். எதிராக அதாவது போஸை எதிர்த்து போட்டியிட்ட நேருவிற்கு இரண்டு வாக்குகள் மாத்திரமே பதிவாகி இருந்தது. ஆனாலும் காந்தியின் சமரச முயற்சிக்கு பின்னர் நேரு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவ்வாறு தேர்ந்தெடுக்க அவர் சொன்ன காரணம் முஸ்லிம் மக்கள் நம்மோடு இணைந்து செயல்பட நேரு தான் சரியான தேர்வாக இருக்கும், சுபாஷ் சந்திர போஸ் அல்ல என்பது அவரின் அன்றைய அரசியல் பார்வை.

இதுவே காங்கிரஸ் கட்சியில் பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது, சுபாஷ் சந்திர போஸ் கட்சியை விட்டே வெளியேறினார். இஃது நேரு செய்த மிகத் தந்திரமான நடவடிக்கை என்று சொன்னவர்களும் உண்டு.

காந்தியை பொருத்தமட்டில் உணர்ச்சி பிழம்பாக நின்ற இந்துக்கள் இந்திய தேசத்தின் பால் கொண்ட பற்றின் காரணமாக இது நாள் வரை பலவிதங்களில் பதம் பார்த்த முஸ்லிம் மக்களை ஏதேனும் செய்து விடுவார்கள் என்று மனப்பூர்வமாக நம்பினார். ஆனால் முஸ்லிம் சமுதாயத்தினரின் எண்ணவோட்டம் வேறு மாதிரி இருந்தது. தாங்கள் தான் வாள் முனையில் இந்த தேசத்தை வென்று ஆட்சி செய்து வருகிறோம், தங்களிடம் இருந்து பெறப்பட்ட ராஜியங்களை….. சுதந்திரத்திற்கு பிறகு தங்களிடமே அதாவது தங்கள் சமூகத்தவரிடமே ஒப்படைக்க வேண்டும், அது தானே நியாயம் என்று பேச ஆரம்பித்து விட்டனர்.

இஃது கல்கத்தாவில் எதிரொலித்தது #நவக்காளி விழா சமயத்தில். பல அக்கிரமங்கள் நடந்தது, பலர் மாண்டனர். காந்தி வந்தார்

ஒரு வார்த்தை கூட கண்டனம் இல்லை. மாறாக அவர்களை, இஸ்லாமியர்களை மன்னித்து விட சொன்னார். கொந்தளித்து போனார்கள் இந்துக்கள். அவர்களின் இழப்பு அப்படி பட்டது. சூழ்நிலையை கருத்தில் கொண்டு தான் உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்தார். தலையில் அடித்துக் கொள்ளாத குறை பலருக்கும்.

அடுத்ததாக பிரிவினை ஏற்பட்டு பாகிஸ்தான் உருவானது. சொத்தை பிரிப்பது போல் இந்திய கஜானாவை திறந்து ரூபாய் 30,00,000 லட்சம் பாகிஸ்தானுக்கு கொடுத்தே ஆக வேண்டும் என்று ஒற்றை காலில் நின்றார்.பலரும் எதிர்த்தனர். சிறுக சிறுக தரலாம், தவிர நமக்கும் அத்தியாவசிய செலவினங்கள் இருக்கிறது என்று சுட்டிக் காட்டினார், சட்டை செய்ய வில்லை மனிதர்.

ஆனால் பின்னாளில் அந்த தொகையை கொண்டு தான் காஷ்மீர் பகுதியில் பழங்குடி மக்களை தூண்டி இன்று வரை பிரச்சினையாக காஷ்மீர் தத்தளிக்கும் சம்பவங்கள் வரிசையாக நடந்தது.

காந்தியின் பல செயல்பாடுகள் ஒரு தலை பட்சமாக, மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் இருந்தாக பல சர்ச்சைக்கள் எழுந்தது. அவரின் அரசியல் கண்ணோட்டம் முதிர்ச்சி அடையாத நிலையில் இருப்பதாக பல கண்டன குரல்கள் வலுத்துள்ளது அந்நாளில். எவையெல்லாம் சொல்லி தேசத்தை கூறுப்போட்டனரோ அவை அனைத்தும் பின்னாளில் பாகிஸ்தானில் நிறைவேற்றினர் என்கிறது சரித்திரம். பிரிவினையின் போது பாகிஸ்தான் வசம் பகுதியில் 27% இந்துக்கள் மற்றும் 3.2%பேர் வரை மற்ற மதத்தை சேர்ந்தவர்கள் வசித்து வந்த நிலையில் இன்று 2.9%பேர் மாத்திரமே மொத்தத்தில் மாற்று மதத்தினர் அங்கு வசித்து வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது 27+3.2=30.2% சதவீதத்தில் வெறும் 2.9%மாத்திரமே உள்ளனர். இதில் இந்துக்களின் நிலை?????

ஆனால் இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் அன்றைய இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 8.7% இருந்தவர்கள் இன்று 21% உயர்ந்துள்ளனர்.சரியாக சொன்னால் சென்செக்ஸ் ஆதாரங்களின் அடிப்படையில் 213 மில்லியன் மக்கள் தொகை கொண்டவர்களாக இருப்பதாக சொல்கிறார்கள்.

கோட்சே குறித்தான இன்றைய தலைமுறையினர் பார்வை வேறு. அவரை RSS காரர் என்றும் இந்து மத வாதி என்றும் தவறான அபிப்ராயம் உருவாக்கி உள்ளார்கள்.

சரி விஷயத்திற்கு வருவோம்.

காந்தியின் அகிம்சை வழி மற்றும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை முறை மிகவும் முரண்பாடுகளை கொண்டது.

இதற்கு சாட்சியாக காந்தியின் சத்திய சோதனை இருக்கிறது. இன்றும் கூட அந்த புத்தகத்தின் பல பக்கங்கள் அடல்ட்ஸ் ஒன்லி ரகம் என்கிறார்கள் பலரும். மனிதர் 68 வயதில் நம்மூர் கமல் ஹாசன் இந்நாளில் செய்யும் பல லீலைகளை அந்நாளில் பரிசோதனை என்று பெயர் கொடுத்து செயல் படுத்தியவர். அதனால் தானோ என்னவோ கமல் ஹாசன் இவரை குறித்து ஹேராம் என்ற பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டதோ என்னவோ…..

ஆனால் ஒன்று மட்டும் நிஜம். அதில் சொல்லப்பட்ட, காட்டப்பட்ட பல விஷயங்களும் நிஜம்.

காந்தியை சுட்ட பின்பு கோட்சே அந்த இடத்திலேயே துப்பாக்கியை திருப்பி பிடித்துக் கொண்டு அசையாமல் நின்று கொண்டு இருந்திருக்கிறார்.

பலரும் இதனை அவர் தற்கொலை செய்து கொள்ள உத்தேசித்து இருந்தார் என்றனர். இது குறித்து அவரிடம் கேட்டதற்கு அங்கு இருந்த வேறு யார் மீது துப்பாக்கி குண்டுகள் வெடித்து விட கூடாது என்பதற்காக அப்படி செய்ததாக சொன்னார்.

நாதூராம் விநாயக் கோட்சே மீது நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்ற சமயத்தில் அவரின் வாதம் இந்திய நீதித்துறை வட்டாரத்தில் மிகவும் பிரபலமான ஒன்று.

நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் பல குளறுபடிகள் நடந்தது. காந்தி உடலில் நான்கு குண்டுகள் இருந்தது என்பவர்கள் உண்டு. நாதூராம் பயன்படுத்திய துப்பாக்கியில் இருந்து இரண்டு தோட்டாக்கள் மாத்திரமே அவர் உடலில் கண்டெடுக்கப்பட்டது என்பவரும் உண்டு. இல்லை இல்லை துப்பாக்கியில் இருந்து மூன்று முறை சுட்டார் என்று நேரில் பார்த்தவர்களின் சாட்சியாக பதிவுகள் சொல்கிறது.

இது போக காந்தி சுடப்பட்டு கிட்டத்தட்ட முப்பது நிமிடங்கள் உயிருடன் இருந்திருக்கிறார். பிரேத பரிசோதனை அறிக்கையில் இதனை உறுதி செய்து இருக்கிறார்கள். பத்து நிமிட நேர தொலைவில் மருத்துவமணை அருகில் இருந்தும் அங்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வில்லை. இது ஏன் என்று யாராலும் விளக்கம் சொல்ல முடியவில்லை. இப்படியாக பல மர்ம முடிச்சுகள் இந்நிகழ்வில் இன்றளவும் விடை தெரியாத மர்மங்களாகவே இருக்கிறது. இதற்கு ஆதாரமாக பல பத்திரிகைகளில் வந்த செய்திகள், நீதிமன்ற வழக்கில் தாக்கல் செய்த ஆவணங்கள் உள்ளன. கைப்பற்றிய துப்பாக்கி யாருடையது என்றோ, அதில் மீதம் இருந்த குண்டுகள் குறித்த பதிவுகளோ காணக் கிடைக்க வில்லை.

ஆனால் நாதூராம் விநாயக் கோட்சே தனது வாக்குமூலத்தில் மிக தெளிவாக தாம் செய்த செயலுக்கு உச்ச பட்ச தண்டனையை தரும் படி நீதிமன்றத்தில் பேசி இருக்கிறார். தான் அவரை கொல்ல வேண்டும் எவ்வளவு பிரயத்னம் செய்தேனோ அந்த அளவிற்கு இந்த செயலுக்கு தண்டனை கொடுக்கும் படியும், மற்றவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கும் படியாக அது இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருக்கிறார். எனது நோக்கம் சரி என்றாலுமே கூட எனது செயல் தவறு என்று பேசியுள்ளார். ஒரு தேர்ந்த ஆசிரியர் போல் இவர் நீதிமன்றத்தில் பாடம் எடுத்தவர் என்று பதிவு செய்து இருக்கிறார்கள்.

அநேகமாக ஒரு கொலைக்குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் இந்த அளவிற்கு நேர்மையாக நேர்த்தியாக தனக்கு தண்டனை தரச் சொல்லி விவாதங்களை முன் வைத்தது நீதிமன்ற வரலாற்றில் நடந்தது இல்லை.

அதனாலேயே அவரது கடைசி ஆசை என்ன என்று கேட்டு அதனை நிறைவேற்ற நீதிமன்றமே உத்தரவு பிறப்பித்திருந்தது. இவரும் தன்னை தன் குல வழக்கப்படி தகனம் செய்து அந்த ஹஸ்தியை பரந்த விரிந்த அகண்ட பாரதம் உருவாக்கும் சமயத்தில் மூன்றாக பிரித்து அங்குள்ள ஜீவநதிகளில் கரைக்க வேண்டும் என்கிற கோரிக்கை முன் வைத்திருக்கிறார். அதன் பொருட்டு அவரது ஹஸ்தி இன்றளவும் அரசு சார்பில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

ஒரு சகாப்தம் நிப்சத்தமாக முடிந்தது அவ்வளவே. ஆனால் ஒன்று மாத்திரம் நிச்சயமான உண்மை, சுடப்பட்ட சமயத்தில் காந்தி ஹேராம் என்று சொல்லி இருக்க வாய்ப்பில்லை. அதுபோலவே உடனடியாக அவர் சாகவும் இல்லை.

– ஜெய் ஹிந்த் ஸ்ரீ ராம்

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,145FansLike
375FollowersFollow
65FollowersFollow
74FollowersFollow
2,707FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

ரூ. 300 கோடி வரை வசூல் செய்துள்ள்ள விக்ரம்.. நன்றி தெரிவித்த கமல்..

உலகம் முழுவதும் விக்ரம் ரூ. 300 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது....

பிரபலமாகி வரும் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணப் புகைப்படங்கள் ..

நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணப் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பிரபலமாகி வருகிறது. நடிகர், பாடலாசிரியர், இயக்குனர்...

இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு சொகுசு காரைப் பரிசளித்த கமல் ..

விக்ரம் படம் வெற்றியடைந்ததையடுத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு சொகுசு காரைப் பரிசளித்து கௌரவ படுத்தினார்...

தாத்தா வசனத்தை தாத்தாவிடமே நடித்துக் காட்டும் பேத்தி!

தனது தாத்தா முன்பு அவருடைய காமெடி வசனத்தை பேசி நடித்து அசத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Latest News : Read Now...