சென்னை பல்கலைகழகத்தில் கவிதை பாடநூலானது! கேரள திருநங்கை மகிழ்ச்சி!

thirunankai - 2026கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் விஜயராஜ மல்லிகா. இவர்  ஒரு திருநங்கை இவரது கவிதைகள் பிரபலமானவை. இவருடைய குறிப்பிட்ட சில கவிதைகள், கேரளாவின் எம்.ஜி.பல்கலைக்கழகம் மற்றும் காலடி ஸ்ரீசங்கராச்சாரியா சம்ஸ்கிருத பல்கலைக்கழகம் ஆகியவற்றில் ஏற்கெனவே பாடமாக வைக்கப்பட்டுள்ளன.

50 சிறந்த கவிதைகளைத் தொகுத்து `தெய்வத்தின்டே மகள்’ என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டுள்ளார். அதில் இடம்பெற்றுள்ள கவிதைகள் மலையாள இலக்கிய உலகத்தினரால் விவாதிக்கப்பட்டு வருகின்றன. அந்தப் புத்தகத்தை சென்னைப் பல்கலைக்கழகத்தின் மலையாளத் துறையில் பயிலும் மாணவர்களுக்குப் பாடப்புத்தகமாக வைக்கப்பட்டுள்ளது.

கேரளாவுக்கு வெளியில் இருக்கும் பல்கலைக்கழகத்துக்கு அவரது புத்தகம் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டிருப்பதை மலையாள கவிஞர்கள் வரவேற்றுள்ளனர். பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத் தேர்வுக்குழுவில் இடம்பெற்றிருந்த கிரீஷ், மலையாளத்துறையின் தலைவரான பேராசிரியர் சந்தோஷ், சம்பிரிதா ஆகியோர், திருநங்கை விஜயராஜ மல்லிகாவின் புத்தகத்தை மூன்றாவது செமஸ்டர் பாடத்துக்குத் தேர்வு செய்துள்ளனர்.thirunankai 1 - 2026திருநங்கை விஜயராஜ மல்லிகாஎனது புத்தகம் மாணவர்களுக்கு பாடமாக வைக்கப்பட்டிருப்பதை நினைக்கையில் தேசிய விருது கிடைத்ததுபோல உணர்கிறேன்.தனது புத்தகம் பல்கலைக்கழகத்தின் சேர்க்கப்பட்டிருப்பதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள திருநங்கை விஜயராஜ மல்லிகா, “இது எனக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய அங்கீகாரமாகக் கருதுகிறேன். தேசிய விருது கிடைத்துள்ளது போன்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது. இதன் மூலம் திருநங்கைகள் குறித்தும் அவர்களின் வாழ்வியல் பற்றியும் விவாதம் ஏற்படும் வாய்ப்பு உருவாகியிருப்பதாகக் கருதுகிறேன்” என்றார்.

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

thurunangai - 2026கவிஞர், சமூக சேவகர், ஆசிரியர், ஆலோசகர், தொல்பொருள் ஆய்வாளர், இசைக்கலைஞர் எனப் பன்முகத் தன்மையுடன் செயல்பட்டுவரும் விஜயராஜ மல்லிகா, விரைவில் அடுத்த கவிதைப் புத்தகத்தை வெளியிட இருக்கிறார்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் தனது புத்தகம் பாடமாக வைக்கப்பட்டுள்ள நிலையில், அந்தப் பல்கலைக்கழகத்துக்கு நேரில் சென்று பார்வையிடவும் அவர் முடிவெடுத்திருக்கிறார். விரைவில் வெளியாக இருக்கும் புத்தகத்துக்கு `ஆண் நதி’ எனப் பெயரிட்டுள்ள அவர், `மல்லிகா வசந்தம்’ என்ற பெயரில் சுயசரிதையும் எழுதி வருகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

Topics

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories