தனியார் பள்ளிக்கு நிகராக திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி

trichy primary school - 2026

திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி தனியார் பள்ளிக்கு நிகராக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவது பொது மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது

துவக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்கள் பயின்று வருகின்றார்கள் தினம்தோறும் பள்ளி சீருடை அணிந்து வரும் மாணவர்களுக்கு தற்போது புதன் தோறும் வண்ண உடை வழங்கி அசத்தி உள்ளார்கள்

முதலாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆரஞ்சு நிறமும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மஞ்சளும் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு சிவப்பு நிறமும் நான்காம் வகுப்பு மாணவர்களுக்கு பச்சை நிறமும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பிங்க் நிற ஆடையும் வழங்க முடிவு செய்து தற்போது மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு சிவப்பு நிற பனியனும் கருப்பு நிற பேண்ட்டும் வழங்கியுள்ளார்கள்

இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளார்கள். பிரதி வாரம் புதன் கிழமை தோறும் வண்ண உடையில் மாணவர்கள் வருவது மாணவர்கள் மனதளவில் உத்வேகத்தையும் புத்துணர்ச்சியும் அளித்துள்ளது .

திருச்சி மணிகண்ட வட்டார கல்வி அலுவலர் மருதநாயகம் தலைமையில், யுகா அமைப்பு அல்லிராணி பாலாஜி, தலைமை ஆசிரியர் ஜெயந்தி, உதவி ஆசிரியர் புஷ்பலதா, அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிறுவனர் யோகா ஆசிரியர் விஜயகுமார் உள்ளிட்டோர் மாணவர்களுக்கு வண்ண சீருடை வழங்கினார்கள்

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

இதற்கு உதவி ஆசிரியர் புஷ்பலதா முகநூல் நண்பர்கள் உதவியுடன் ஒரு லட்சத்து 50 ஆயிரம் நிதி திரட்டி 407 பள்ளி மாணவர்களுக்கு புதன் கிழமைக்கு வண்ண சீருடை வழங்கி இருப்பது பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories