ஜன.18ல் சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த விளக்கக் கூட்டம்!

Published:

caa meeting1 - 2026

வி த பீப்பிள் ஆஃப் சென்னை – சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து கருத்தரங்கு நடத்தப் படுகிறது. 1955ம் வருட குடியுரிமை திருத்தச் சட்ட நடைமுறையாக்கம் என்பது, மனிதநேய அணுகுமுறையா? பாகுபாடு காட்டப்படுவதா? என்ற தலைப்பில் கருத்தரங்கு நடத்தப் படுகிறது.

இந்தக் கருத்தரங்கில், இந்தியா ஃபவுண்டேஷன் நிர்வாகக் குழு உறுப்பினர் ராம் மாதவ், சமூக செயற்பாட்டாளரும் விமர்சகருமான பானு கோம்ஸ், எழுத்தாளர் ம.வெங்கடேசன், நடிகரும் சமூக விமர்சகருமான ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளைப் பகிர்கிறார்கள்.

வரும் சனிக்கிழமை ஜன.18ம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை மயிலாப்பூர் பிஎஸ் உயர்நிலைப்பள்ளி டேக் தட்சிணாமூர்த்தி அரங்கத்தில் இந்தக் கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

caa meeting - 2026

Related articles

Recent articles

spot_img