ஓட்டல் குளியலறையில் மாட்டிக் கொண்ட பெண்! காவலன் ஆப் ஆல் தப்பினார்!

உள்ளூர் செய்திகள் சென்னை பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
kavalan - 2026

ஓட்டல் பாத்ரூமில் மல்லிகா என்ற பெண் சிக்கி கொண்டார்.. யாரையும் கூப்பிட்டு சொல்லவும் முடியவில்லை.. செல்போனிலும் சிக்னல் இல்லை.. ஆனாலும் வெளியே பத்திரமாக வந்தார்.. எப்படி?

இன்றைக்கு இருக்கும் காலகட்டத்தில் பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழக போலீசார் காவலன் SOS” என்ற செயலியை அறிமுகப்படுத்தி உள்ளனர்.. நைட் நேரத்தில் பாதுகாப்பற்ற சூழலை உணரும் பெண், இந்த ஆப்பில் உள்ள SOS என்ற பட்டனை அழுத்தினால் போதும்.

நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்ற தகவல் ஜிபிஎஸ் மூலம் கன்ட்ரோல் ரூமுக்கு போய்விடும்.. அடுத்த சில செகண்ட்டுகளில் போலீசாரின் ரோந்து வண்டி வந்து அங்கேநின்றுவிடும். இந்த SOS பட்டனை அழுத்தும்போது, செல்போனில் உள்ள கேமரா ஆட்டோமேட்டிக்காக 15 விநாடிகளில் வீடியோ எடுத்து அதையும் கன்ட்ரோல் ரூமுக்கு அனுப்பி விடும்.

செல்போன் சிக்னல் இல்லை என்றாலும் பரவாயில்லை.. மெசேஜ் தானாகவே போய்விடும்.. தமிழ், இங்கிலீஷ் என 2 மொழிகளும் இதில் உண்டு.. அதனால் மொழிப்பிரச்சனை யாருக்கும் கிடையாது.. இந்த ஆப்பில் Registration பக்கத்தில் பெயர், செல்போன் நம்பரை பதிவு செய்து, அடுத்த பக்கத்தில் அட்ரஜ், இ-மெயில் அட்ரஸ் குறித்தால் போதும்.. உங்களுக்கு காவலன் ஆப் ரெடியாகிவிடும்.. ரொம்ப சிம்பிள்!!

பெண்களின் அவசர உதவிக்காக இது அறிமுகமாகி உள்ளதால், பல பெண்கள், குழந்தைகள் இதனை டவுன்லோடு செய்து வைத்து கொண்டு வருகின்றனர்.. இப்பவே 10 லட்சம் பேரையும் தாண்டி இதை டவுன்லோடு செய்துள்ளனராம்.. ஆனால் விளையாட்டுத்தனமாக யாரும் இதை பயன்படுத்த வேண்டாம் என்று போலீசார் அடிக்கடி வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

இந்த காவலன் ஆப்பைதான் மல்லிகா என்ற பெண்ணும் டவுன்லோடு செய்து வைத்துள்ளார்.. இவர் ஒரு தொழில்நுட்ப வல்லுநர்.. நுங்கம்பாக்கத்திலுள்ள ஒரு ஸ்டார் ஹோட்டல் பாத்ரூமில் எதேச்சையாக சிக்கி கொண்டார்… அந்த கதவு திடீரென திறக்கவில்லை.. சுமார் 20 நிமிடங்கள் பாத்ரூமுக்குளேயே மாட்டிக் கொண்டுள்ளார்.. அந்த ஹோட்டல் ஊழியர்களை தொடர்புகொள்ள முடியவும் இல்லை..

தன்னுடைய செல்போனில் கூப்பிடலாம் என்றால் சிக்னலும் இல்லை. அப்போதுதான் அவருக்கு காவலன் நினைவுக்கு வந்தான்… அதில் இருந்த ரெட் கலர் பட்டனை அழுத்தி விஷயத்தை சொன்னார்.. அடுத்த 2 நிமிஷத்தில் போலீசார் அங்கு வந்துவிட்டனர்.. பாத்ரூமில் இருந்து மல்லிகாவை பத்திரமாக மீட்டனர்.

இதை பற்றி மல்லிகா சொல்லும்போது, “அப்போ மணி காலைல 11 மணி.. அந்த பாத்ரூம் ரொம்ப சின்னதா இருந்தது.. கதவின் தாழ்ப்பாளில் என்னவோ பிரச்சனை.. நேரம் ஆக ஆகதான் கொஞ்சம் பயமா இருந்தது.. கத்தி கூப்பிட்டு பார்த்தேன் யாரும் வரவில்லை.. அந்த பாத்ரூம் ஊழியர்கள் இருக்கும் இடத்தில் இருந்து கொஞ்சம் தள்ளி இருந்தது.. அப்பதான் எனக்கு SOS ஞாபகம்வந்து, அழுத்திவிட்டேன்.. என்னை பத்திரமாக மீட்டனர்” என்றார் ஆச்சரியத்துடன்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.