எனக்கு இருமல், என் ஃப்ரண்ட்ஸ் நல்லா இருக்க எனக்கு லீவ் கொடுங்க! மாணவனின் விடுப்பு கடிதம்!

உள்ளூர் செய்திகள் கல்வி சற்றுமுன் சென்னை பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
corono 1 1 - 2026

சீனாவில் பரவிய அந்த வைரஸ் தற்போது 50 உலக நாடுகளுக்குப் பரவியுள்ளது.

சீனாவின் இன்று உயிரிழப்பின் எண்ணிக்கை 4000 ஐ தாண்டியுள்ளது. மேலும், ஆயிரக் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வைரஸ் வேகமாகப் பரவுவதால் சளி, காய்ச்சல் அறிகுறி இருக்கும் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என்று மத்திய அரசும் தமிழக அரசும் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இந்நிலையில், முகலிவாக்கம் பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவர், தனக்கு விடுப்பு வேண்டும் என்பதற்காக கொரோனா வைரஸ் ஐ சுட்டிக் காட்டி சுவாரஸ்யமான விடுப்பு கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், “ஐயா.. நான் தங்கள் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கிறேன். தற்போது நாட்டில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது.

student 1 - 2026

அது எளிதில் பரவக்கூடிய வைரஸ். எனக்குச் சளி, காய்ச்சல், அறிகுறி தெரிகிறது. எனவே மற்ற மாணவர்களின் நலன் கருதி நான் நீண்ட விடுப்பு. மேலும் அரசாங்கமும் சளி,காய்ச்சல் அறிகுறி உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளது

அதனால் நான் மற்ற மாணவ மாணவர்களின் நலன் கருதி நீண்ட விடுப்பு எடுக்கிறேன். எனது விடுப்பு நாட்களை வருகை நாளாகப் பதிவு செய்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று எழுதியுள்ளார். இந்த விடுப்பு கடிதம் தற்போது இணையதளத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.