மாநிலங்களவைக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் மற்றும் வைகோ ஆகியோர் சட்டப்பேரவை செயலாளரிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர்
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார் வைகோ!
மாநிலங்களவைக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தால் நாட்டின் நலனுக்காகவும், தமிழக நலனை காக்கவும் அர்ப்பணிப்புடன் கடமையாற்றுவேன் என்று வேட்புமனு தாக்கலுக்கு பின் வைகோ செய்தியாளர்களிடம் பேசியபோது கூறினார்.
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட திமுக வேட்பாளர்கள் சண்முகம் மற்றும் வில்சன் ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.




